கூடாங்குளம் அணு மின் நிலையம்: மார்ச் முதல் செயல்படும்
திருநெல்வேலி:
கூடாங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் அணு மின் நிலையம் அடுத்த ஆண்டு மார்ச்மாதம் முதல் செயல்படத் தொடங்கும்.
இது தொடர்பாக சமீபத்தில் பிரமதர் வாஜ்பாய் ரஷ்யா சென்றிருந்தபோது ஒப்பந்தம் ஏற்பட்டது.
இது குறித்து கூடாங்குளம் அணு உலையின் திட்ட இயக்குனர் அகர்வால், நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர்பாரிவால், எம்.எல்.ஏக்கள், இந்த அணு மின் நிலையம் அமைக்க இடம் தந்து உதவிய பொது மக்களின் கூட்டம்திருநெல்வேலியில் நடந்தது.
அதில் பேசிய அகர்வால், இங்கு முதல் அணு உலை அமைக்கும பணி விரைவில் தொடங்கும். இந்த அணு உலைமார்ச்சில் செயல்படும். பின்னர் படிப்படியாக மேலும் 5 அணு உலைகளும் அமைக்கப்படு செயல்படத் தொடங்கும்என்றார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் கூறுகையில், நிலம் தந்து உதவியர்களின் குடும்பத்தினருக்கு இந்த அணு மின்நிலையத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications
