தமிழக போலீஸ் நிலையம் மீதான தாக்குதலில் நக்கீரன் நிருபருக்கு தொடர்பு- கர்நாடகம் புகார்
கொள்ளேகால்:
தமிழகத்தில் உள்ள வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தின் மீது வீரப்பன் கும்பல் நடத்திய தாக்குதலில் நக்கீரன்நிருபர் சிவசுப்ரமணியனுக்கு தொடர்பு உள்ளது என்று கர்நாடக போலீஸ் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவரைக் கைது செய்துள்ள கர்நாடக போலீசார் இந்தத் தாக்குதலில் அவரையும் தொடர்புபடுத்திகுற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனை முதன்முதலில் காட்டில் சென்று சந்தித்த முதல் நிருபர் சிவசுப்ரமணியன் தான். கடந்த 2நாட்களுக்கு முன்பு கர்நாடக அதிரடிப்படை போலீசார் தமிழகத்துக்குள் நுழைந்து அவரைக் கைது செய்து சிறையில்வைத்துள்ளனர்.
இந்நிலையில் அவரை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கொள்ளேகால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. சிசுப்ரமணியன் சார்பில் வக்கீல் ஈஸ்வரா சந்திராவும், அரசுசார்பில் வக்கீல் காளிங்கசாமியும் ஆஜராகி வாதாடினர்.
அப்போது, சிவசுப்ரமணியம் தற்போது போலீஸ் காவலில் இருப்பதால் அவரை விடுதலை செய்ய முடியாதுஎன்றும், நீதிமன்றக் காவலுக்கு மாற்றப்பட்ட பிறகுதான் ஜாமீனில் விடுவிக்க முடியும் என்றும் அரசு வக்கீல்வாதாடினார்.
இதற்கிடையில் சிவசுப்ரமணியன் மீதான குற்றப்பத்திரிக்கையை துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தப்பா,இன்ஸ்பெக்டர் மாரி ஷெட்டி ஆகியோர் நேற்று கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
அதில் கூறப்பட்டுள்ள விவரம்:
கடந்த 1998ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள வெள்ளித்திருப்பூரில் உள்ள காவல் நிலையத்தின் மீது சந்தன வீரப்பன்கும்பல் நடத்திய தாக்குதலில் சிவசுப்ரமணியனுக்கும் பங்கு உள்ளது.
இதை அவரே ஒத்துக்கொண்டுள்ளார். அந்த காவல்நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள்புதைத்துவைத்திருந்த இடத்தையும் அவர் அடையாளம் காட்டினார்.
அதன்படி பிலிகிரி ரெங்கனபெட்டா அருகே உள்ள கொங்கனகடவு காட்டுப் பகுதியில் துப்பாக்கிகள், சிலதோட்டாக்கள் மற்றும் 20 ஜெலாட்டின் குச்சிகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
இன்னும் பல வழக்குகளில் இவக்குத் தொடர்பு இருப்பதால், தொடர்ந்து அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இவ்வாறு இன்ஸ்பெக்டர் மாரி ஷெட்டி கூறினார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
சுப்பிரமணியனை விடுவிக்க நிருபர்கள் கோரிக்கை:
இந் நிலையில் சிவசுப்பிரமணியயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோயம்புத்தூர் நிருபர்கள் சங்கம்கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிருபர்கள், உடனடியாக அவர் மீதானபுகார்களை பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications