அல்-காய்தா தீவிரவாதிகளுடன் மோதல்: 35 அமெரிக்க வீரர்கள் பலி?
இஸ்லாமாபாத்:
தெற்கு ஆப்கானிஸ்தானில் நடந்த அல்-காய்தா தீவிரவாதிகளுடன் நடந்த பயங்கர மோதலில் 35 அமெரிக்கராணுவத்தினர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து பாகிஸ்தானின் முன்னணி ஆங்கில நாளிதழான த நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், தெற்குஆப்கானிதானில் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமெரிக்க சிறப்புப் படையினர் முகாமிட்டுள்ளனர்.இவர்கள் காண்டஹாரை சுற்றியுள்ள பகுதிகளில் பின்லேடனைத் தேடி வருகின்றனர்.
கடந்த 22ம் தேதி பின்லேடனின் அல்-காய்தா தீவிரவாதிகளுக்கும் இந்தப் படையினருக்கும் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. அல்-காய்தா தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன அமெரிக்கப் படையினர்தரப்பினர் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது.
அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தியும் கூட பயன் ஏற்படவில்லை.இதையடுத்து அமெரிக்கப் படையினர் பின்வாங்கினர்.
இந்தத் தாக்குதலில் 35 அமெரிக்க சிறப்புப் படையினர் பலியாகிவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இறந்து போன இந்த வீரர்களின் உடல்கள் பாகிஸ்தானில் உள்ள ஜகோபாபாத் விமானப் படைத் தளத்துக்கு சி-130ரக விமானங்கள் மூலம் கொண்டு வரப்பட்டன.
இந்த மாபெரும் உயிரிழப்புகளால் பென்டகன் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது.
இவ்வாறு த நியூஸ் தெரிவிக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications