சில அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்ப ஜெயலலிதா முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அமைச்சர் வளர்மதி ஜெபராஜின் உதவியாளர் சண்முகசுந்தரம், அமைச்சரின் தம்பியாலேயே குத்திக்கொல்லப்பட்டதையடுத்து, வளர்மதியின் அமைச்சர் பதவி பறிபோகும் என்று கூறப்படுகிறது. இதுதவிரஅமைச்சரவையில் மேலும் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக அமைச்சரவையில் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் வளர்மதி ஜெபராஜ். மதுரை மேற்குத்தொகுதியில் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.

அமைச்சருக்கு உதவியாளராக இருந்தவர் சண்முக சுந்தரம். இவர் ஒரு வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றிவந்தார். இவர் கடந்த 11ம் தேதி அமைச்சர் வளர்மதியின் தம்பி மனோகரன் என்பவரால் கத்தியால் சரமாரிக்குத்தப்பட்டார். இதைத் தடுக்க முயன்ற சண்முகசுந்தரத்தின் மகன் வினோத்தும் குத்தப்பட்டார்.

இதையடுத்து மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சண்முகசுந்தரம் நேற்று(வெள்ளிக்கிழமை) மரணமடைந்தார்.

இதையடுத்து மனோகரன் உட்பட அவரது கூட்டாளிகள் 3 பேர் மீது போலீசார் வழக்குத் தொடர்ந்தனர். சிலநாட்கள் தலைமறைவாக இருந்த மனோகரன், சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சரணடைந்தார்.

அமைச்சர் வளர்மதிக்கு உதவியாளராகவும், அரசியல் ஆலோசகராகவும் இருந்தவர் சண்முக சுந்தரம். இவரதுதூண்டுதலின் பேரில் தான் அமைச்சர் வளர்மதி தனது தந்தை ஞானதுரை, தம்பி மனோகரன் ஆகியோருடன் உள்ளஉறவைத் துண்டித்தார் என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகத் தான் மனோகரன்,சண்முகசுந்தரத்தைக் குத்திக் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கு , கட்சிக்கு அவப் பெயர் ஏற்படக் காரணமாக இருந்த அமைச்சர்வளர்மதியின் மீது கோபம் ஏற்பட்டுள்ளதாம்.

தம்பி வாய் திறந்தால்....

ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல்களில் சரியாகப் பணியாற்றாத கட்சி நிர்வாகிகளைக் களையெடுத்து வரும்ஜெயலலிதா, அமைச்சரின் விவகாரம் பற்றி வெளியில் தெரிய ஆரம்பித்தவுடன், அவர் வகித்து வந்த மாநிலமகளிர் அணிச் செயலாளர் பதவியைப் பறித்தார்.

இந்நிலையில் அமைச்சரின் தம்பி மனோகரன் நீதிமன்றத்தில் அளித்த வாக்குலத்தில், அமைச்சரான குறுகியகாலத்தில் அவர் செய்த மோசடிகளை விரைவில் ஆதாரங்களுடன் நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார். இது கட்சிக்குமேலும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் என்பதால், விரைவில் வளர்மதியின் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்றுகூறப்படுகிறது.

மேலும், இவர் தவிர மேலும் சில அமைச்சர்களுக்கும் அமைச்சர் பதவி பறிபோகும் என்றும், சில அமைச்சர்களின்இலாக்காக்கள் மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. பல அமைச்சர்களின் செயல்பாட்டில் ஜெயலலிதாவுக்குதிருப்தியில்லை.

இன்று டெல்லி செல்லும் முதல்வர் பன்னீர்செல்வம், தமிழகம் திரும்பியவுடன் கவர்னரைச் சந்தித்துஅமைச்சரவையில் மாற்றம் செய்வார் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+