தமிழக அரசின் செயல்பாடுகள்: கொந்தளிப்பில் அரசு ஊழியர்கள்
சென்னை:
பஸ் தொழிலாளர்கள் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டாலும், பொதுமக்கள் படும் அவதி தொடர்ந்துகொண்டிருக்கிறது. அரசுக்கும் கெட்ட பெயர் கூடிக் கொண்டேயிருக்கிறது.
பஸ் தொழிலாளர் போராட்டம் தற்போதுதான் முடிவுக்கு வந்துள்ளது. இதுவரை சில சங்கங்களுடன் மட்டும்தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தது. இந்தப் பிரச்சினைக்கு எப்போது முடிவு வரும், வழக்கமான போக்குவரத்துஎப்போது தொடரும் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பில் பொது ஜனங்கள் பரிதாபமாக காத்துக்கொண்டிருந்தார்கள்.
அரசு பஸ் தொழிலாளர்கள் ஸ்டிரைக் காரணமாக தமிழகத்தில் போக்குவரத்து பெரும்நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் பேருந்துகள், மினிபஸ்கள், தற்காலிக டிரைவர், கண்டக்டரவைத்து ஓடும் அரசு பஸ்கள் என தமிழகத்தில் போக்குவரத்தில் பாதிப்புஇல்லை. ஆனால் அதில் பயணம் செய்யும் பொதுமக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தனை பஸ்களிலும் (அரசு சிட்டி பஸ்களிலும் கூட) குறைந்தபட்சமே 2 ரூபாய்தான் டிக்கெட் கொடுக்கிறார்கள்.அரசு பஸ்களில் ரூ. 2, ரூ. 3, ரூ. 5 என மூன்றே டிக்கெட்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. தனியார் பஸ்களிலோஇன்னும் மோசம். குறைந்தது ரூ. 3 அதிகபட்சம் ரூ. 10. தனியார் பஸ்களில் டிக்கெட் கொடுக்கப்படுவது கிடையாது.மினி பஸ்களில் மட்டும் டிக்கெட் கொடுக்கிறார்கள்.
மாதக் கடைசியில் இவ்வளவு செலவழித்து வெளியில் போவது குறித்து பொதுமக்கள் பலத்த சிந்தனையில்இருந்தனர். ஆனால் வெளியில் போயே ஆக வேண்டிய நிலையில் உள்ளவர்களின் நிலை குறித்து சொல்லவேண்டியதில்லை. தினசரி ரூ. 20 வரை செலவழிக்க வேண்டியதுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு இந்த மாதச் சம்பளத்தை வேறு ஒரு வார காலத்திற்கு தள்ளிப் போட அரசு முடிவுசெய்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதை நினைத்து அரசு ஊழியர்கள் அனைவரும் கையைப் பிசைந்துகொண்டுள்ளனர். ஏற்கனவே ஆபிஸுக்குப் போக தினசரி ரூ. 20, 30 என செலவழித்துக் கொண்டுள்ள நிலையில்சம்பளம் வேறு வராவிட்டால் என்ன செய்வது என்ற சோகத்தில் அரசு ஊழியர்கள், தமிழக அரசு மீதுஅதிருப்தியுடன் இருந்தார்கள். சம்பளம் மட்டுமல்லாது பல்வேறு சலுகைகளையும் ரத்து செய்ய அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
தற்போதைய தமிழக சூழ்நிலைகள் அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. போக்குவரத்துத்தொழிலாளர்கள் பிரச்சினையில் இத்தனை தூரம் அரசு மெத்தனமாக இருக்கக் கூடாது என்று அனைத்துத்தரப்பினரும் அபிப்பிராயப்படுகிறார்கள். நல்லவேலையாக தற்போது தொழிலாளர்கள் இறங்கி வந்துபோராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர். கூட ஒரு இரண்டு சதவீதமாவது போனஸைஅதிகரித்து, சில சங்கங்களின் பிடிவாதத்தைத் தளர்த்தி வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வைத்திருக்கலாம் என்றுபொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகமே பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. குறிப்பாகதினசரி பஸ் பயணம் செய்பவர்கள் மிகுந்து அவதிக்குள்ளாகினர். அவர்கள் அனைவரும் தமிழக அரசைகடுமையாக சாடுகிறார்கள். அதே அளவுக்கு போக்குவரத்து ஊழியர்களையும் கடுமையாக கண்டிக்கிறார்கள்.
அரசு ஊழியர்களுக்கு முதல் தேதியன்று சம்பளம் தரத் தவறினால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பல அரசுஊழியர் சங்கங்கள் இறங்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. நிதி நிலையை சாக்காக வைத்து அரசுதங்களுக்கு வழங்கி வரும் பல்வேறு சலுகைகளை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதை இப்போதேகண்டிக்கத்தவறினால் இது நிரந்தரமாகி விடலாம் என்றும் அரசு ஊழியர்கள் அஞ்சுகிறார்கள்.
எனவே, தங்களது சம்பளம் உள்ளிட்ட எதற்கு ஆபத்து வந்தாலும் உடனடியாக தீவிரப் போராட்டத்தில் இறங்கஅரசு ஊழியர்கள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications