ஊழியர்கள் வெற்றியையே விரும்புகிறேன் - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

பஸ் போக்குவரத்துத் ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளனர். அரசுபழிவாங்குதல் நடவடிக்கை மற்றும் பிடிவாதப் போக்கில் இருப்பதால் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 16 நாட்களாக தீவிரமாக நடந்து வந்த போராட்டம் எந்தவித முடிவும் இல்லாமல் வாபஸ்பெறப்பட்டது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே போராட்ட வாபஸ் குறித்து கருணாநிதி கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தப் போராட்டத்தில் தொழிற்சங்கங்களுக்கு வெற்றியா, தோல்வியா என்பது குறித்து கருத்துத் தெரிவிக்கவிரும்பவில்லை. தொழிலாளர்கள் எப்போதும் வெற்றி பெறுவதையே நான் விரும்புகிறேன்.

அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் கொடுக்க பணமில்லை என்று அரசுத் தரப்பில் செய்தி பரப்பப்படுகிறது.ஆனால் சமீபத்தில் தான் மத்திய அரசு ரூ. 250 கோடி நிதியுதவியை மாநில அரசுக்கு வழங்கியுள்ளது என்பதைசுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+