கொலை வழக்கு தொடர்பாக கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி கைது

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கொலை வழக்கு தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை)காலை கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மற்றும் மாஞ்சோலை எஸ்டேட் ஆகிய பகுதிகளில் நடந்த இரண்டு கொலைகள் தொடர்பான வழக்கில்கோர்ட் உத்தரவுப்படி டாக்டர் கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் அசுதோஷ் சுக்லா நிருபர்களிடம் தெரிவித்தார்.

இன்று காலை புளியமுத்துவில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்ற போலீசார் அவரைக் கைது செய்து வெளியில்அழைத்து வந்தனர்.

அதற்குள் பத்திரிக்கை நிருபர்களும், டி.வி. நிருபர்களும், கேமிராமேன்களும், புகைப்படக்காரர்களும் அங்குபெருமளவில் கூடிவிட்டனர். ஆனால் டாக்டர் கிருஷ்ணசாமியைப் புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோபோலீசார் அனுமதிக்கவில்லை.

ஆனால் அதையும் மீறி படம் பிடிக்க முயன்ற ஜீ டிவி கேமராமேன் சுரேஷ் குமாரை போலீஸார் தடுத்துநிறுத்தியபோது அவர் கீழே விழுந்தார். இதை பத்திரிக்கையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் கடுமையாகஆட்சேபித்தனர்.

இதனால் அந்த இடத்தில் பெரும் "தள்ளுமுள்ளு" ஏற்பட்டதையடுத்து போலீஸ் அதிகாரிகள் தலையிட்டுஅமைதியை ஏற்படுத்தினர். பெரும் குழப்பத்திற்குப் பிறகே டாக்டர் கிருஷ்ணசாமியைப் போலீசார் அழைத்துச்சென்றனர்.

பின்னர் கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி ஆஜர் செய்யப்பட்டார். அதன் பின் அவர்திருநெல்வேலி சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+