For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்மாவின் அன்பை இழந்த வளர்மதி ஜெபராஜ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பிற்பட்டோர் நிலத்துறை அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். குடும்பத்தகராறு மூலம் கட்சிக்கும், அரசுக்கும் கெட்ட பெயரைத் தேடித் தந்தமைக்காக அவரை பதவியிலிருந்து நீக்க அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்தார் என்று தெரிகிறது.

வளர்மதி ஜெபராஜின் தம்பி மனோகரனுக்கும்,அவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. முன்னாள் பத்திரிக்கையாளர்சண்முக சுந்தரம், வளர்மதியின் தனி உதவியாளராக இருந்து வந்தார். இது மனோகரனுக்குப் பிடிக்கவில்லை.

இந்த மோதல் பெரிதாக வெடிக்கவே, மனோகாரன் தனது கூட்டாளிகளுடன் சண்முக சுந்தரத்தை சரமாரியாக கத்தியால்குத்திவிட்டுத் தலைமறைவானார். இதில் சண்முக சுந்தரம் இரண்டு நாட்களுக்கு முன் மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில்மரணமடைந்தார்.

இந்த சம்பவங்கள் தமிழகத்தையே கலக்கி விட்டன. இதையடுத்து முதலில் கட்சிப் பதவியை இழந்தார் வளர்மதி ஜெபராஜ்.தற்போது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டு விட்டது. ஜெயலலிதா ஆலோசனையின் பேரில் முதல்வர் பன்னீர் செல்வம்ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். இதையேற்று வளர்மதி ஜெபராஜின் பதவி பறிக்கப்பட்டு விட்டது.

மதுரை மேற்குத் தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏவான வளர்மதி ஜெபராஜ் நெல்லை மாவட்டம் திசையவன் விளையைபூர்வீகமாகக் கொண்டவர். 35 ஆண்டுகளுக்கு முன்பே இவரது குடும்பம் மதுரைக்கு வந்து செட்டிலாகி விட்டது.

வளர்மதி ஜெபராஜின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. வளர்மதியை படிக்க வைத்தது ஜெயலலிதாதான். அவருக்கு கல்யாணம்செய்து வைத்ததும் ஜெயலலிதாதான். ஆனால் இப்போது கணவரைப் பிரிந்து வாழ்கிறார் வளர்மதி.

ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளையாக இருந்து வந்த வளர்மதி அவரே எதிர்பாராத விதத்தில் அமைச்சர் பொறுப்புக்குஉயர்த்தப்பட்டார். ஆனால் அமைச்சர் பொறுப்புக்கு வந்த பிறகு அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

அரசு அதிகாரிகளிடம் அடாவடியாக நடந்து கொள்கிறார் என்று புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து அவரை ஜெயலலிதாநேரில் அழைத்து கண்டித்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு அவரின் தம்பி மூலம் பிரச்சினைகள் உருவானது.

ஜெயலலிதாவின் மனதில் இருந்த வளர்மதி ஜெபராஜ் அதைக் கெடுத்துக் கொண்டார். தற்போது அமைச்சர் பதவியையும் இழந்துகட்சி வட்டாரத்தில் கூனிக் குறுகி நிற்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X