ஆயிரக்கணக்கான தலிபான் வீரர்கள் சரண்

Subscribe to Oneindia Tamil

குண்டூஸ்:

நார்தர்ன் அலையன்ஸ் படையினர் முற்றுகையிட்டுள்ள குண்டூஸ் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான தலிபான்வீரர்கள் சரணடைந்து வருகிறார்கள். இதனால் அங்கு போர் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள குண்டூஸ் பகுதி மட்டும் தலிபான்கள் வசம் எஞ்சியிருந்தது.இதனால் ஆப்கானின் பெரும் பகுதியைக் கைப்பற்றியுள்ள நார்தர்ன் அலையன்ஸ் படையினர் (தற்போது ஐக்கியமுன்னணி), குண்டூஸ் பகுதியைச் சுற்றி முற்றுகையிட்டு, கடும் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் தற்போது ஆயிரக்கணக்கான தலிபான் வீரர்கள், ஐக்கிய முன்னணிபடையினரிடம் சரணைடையத் துவங்கியுள்ளனர். இவர்கள் தவிர பின் லேடனின் அல்காய்தா தீவிரவாதிகளும்சரணடைந்துள்ளனர். இதனால் ஆப்கானில் போர் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஏதேனும்எதிர்புகள் இருந்தால் தடுக்க, டாங்கர்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்கள் குண்டூஸைச் சுற்றிநிறுத்தப்பட்டுள்ளன.

சரணடைந்தவர்களில் தலிபான்களின் ஊள்துறை துணை அமைச்சர் முல்லா கஷ்கர் குறிப்பிடத் தக்கவர்.சரணடைந்த பிறகு இவர் கூறுகையில், ஆப்கானில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அமைதி ஏற்படவழிவகுக்க வேண்டும். எதிர்கால ஆப்கானின் வளர்ச்சிக்கு அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டும் என்றார்.

சரணடைந்தவர்கள் யாரும் போர்க் கைதிகளாகக் கருதப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் அனைவரும்ஆப்கானில் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் காபூலுக்கு அருகில் உள்ள மைதான் சாஹ்ர் என்ற பகுதியில் இருந்து 200 தலிபான் வீரர்கள்சரணடைந்தனர். இவர்கள் அனைவரும் அவரவர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+