விஷம் சாப்பிட்டு தந்தை, மகள் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சிவகாசி:

சிவகாசியில் மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால் கோபமடைந்த கணவர் தனதுமகளுடன் விஷம் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் இலங்கை அகதி. இவரது மனைவி கோகிலா ராணி. இவர்களுக்குசுதாகரன் மற்றும் சாவித்திரி ஆகிய குழந்தைகள் உள்ளனர். கோகிலாவுக்கும், சந்திரகேருக்கும் இடையே அடிக்கடிதகராறு ஏற்படுவது வழக்கமாம்.

இந்த நிலையில் வழக்கம் போல இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்துக் கொண்டுஅருகில் உள்ள தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார் கோகிலா.

முதல் நாள் சண்டை போட்டு விட்டு அடுத்த நாள் காலையில் வீடு திரும்பிய சந்திரசேகர், வீட்டில் கோகிலாஇல்லாததையும், குழந்தைகள் சாப்பாடு கூட இல்லாமல் கஷ்டப்படுவதையும் பார்த்து அதிர்ந்து போனார்.

குழந்தைகளை விட தனது சுய நலனே முக்கியம் என்று போய் விட்ட மனைவியின் மீது அவருக்கு கோபம்ஏற்பட்டது. அவரை திருத்த அனைவரும் சேர்ந்து தற்கொலை செய்வதுதான் சரி என்ற முடிவுக்கு வந்தார்.

இதையடுத்து தனது குழந்தைகள் இருவருக்கும் விஷத்தை சாப்பிடக் கொடுத்தார். பின்னர் தானும் சாப்பிட்டார்.சிறிது நேரத்தில் மூன்று பேரும் அலறியபடியே மயங்கி விழுந்தனர்.

அவர்களது அலறல் சப்தம் கேட்ட பக்கத்து வீடுகளில் வசிப்போர் விரைந்து வந்து மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் சந்திரசேகரும், சாவித்திரியும் பரிதாபமாக இறந்தனர். சுதாகரன் தேறி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+