மீண்டும் போராட்டம் வெடிக்கும்: பஸ் ஊழியர் சங்கங்கள் எச்சரிக்கை
சென்னை:
ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி அடுத்த ஏப்ரல் மாதத்துக்குள் கருணைத் தொகையை அரசு வழங்காவிட்டால்,மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்ற போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இது தொடர்பாக சி.ஐ.டி.யூ. சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.கே. ரங்கராஜன் கூறியதாவது:
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது. நாங்கள் யாரும் விரும்பிப் போராடவில்லை.விரும்பியும் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை.
ஆனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மட்டுமே அரசு குறியாகஉள்ளது.
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இப்போது 8.33 சதவீத போனசும், வரும் ஏப்ரல் 14ம் தேதிக்கு முன்னதாககருணைத் தொகையான ரூ.3,500ம் வழங்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் இதை வெளிப்படையாக அறிவித்தால் மற்ற துறையினரும் கூடுதல் போனஸ் கேட்பார்கள் என்பதால் அரசுஇதை வெளிப்படையாக அறிவிக்கத் தயங்குகிறது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு 80 சதவீத ஊழியர்கள் கடைசி வரை ஆதரவு தெரிவித்தனர்.
அரசு தன்னுடைய வார்த்தையைக் காப்பாற்றாவிட்டால், மீண்டும் நிச்சயமாகப் போராட்டம் வெடிக்கும் என்றார்ரங்கராஜன்.












Click it and Unblock the Notifications