ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி வகுப்பு
சென்னை:
காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் பெண்களின் குறைகளை முறையாக தீர்ப்பதற்கு வகை செய்யும் நிகர்நிலை பயிற்சி வகுப்பு சென்னையிலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை)தொடங்கப்பட்டது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி.சங்கர் இந்த பயிற்சி வகுப்பைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர்பேசுகையில்,
காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் பெண்களின் குறைகளைத் தீர்த்து வைக்க இந்த பயிற்சி வகுப்புமிகவும் உதவியாக இருக்கும்.
முதல் கட்டமாக 20 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதிலும்80,000 காவலர்களுக்கு இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபி கணபதி பேசுகையில், தர்மபுரி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் பெண்சிசுக் கொலை அதிக அளவில் உள்ளது. அதைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த மாவட்டங்களில் பெண்கள் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர். இந்த நிலை மாற்றப்படவேண்டும்.
சென்னையில் இதுவரை 1,400 காவலர்களுக்கு நிகர் நிலை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது. பிறமாவட்டங்களில் 3,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
பயிற்சி முகாமில் டிஜிபி நெய்ல்வால், சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications