விபத்தில் பலியான பாடகர் சாகுல் ஹமீது குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு
சென்னை:
கடந்த 1997ம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்த பிரபல பின்னணி பாடகர் சாகுல் ஹமீது குடும்பத்திற்கு ரூ.15லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சென்னை மோட்டார் விபத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1994ம் ஆண்டு முதல் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானால் பின்னணிப் பாடகராகஅறிமுகப் படுத்தப்பட்டவர் சாகுல் ஹமீது.
இவர் கடந்த 1997ம் ஆண்டு சென்னையிலிருந்து காரில் திருச்சிக்குச் சென்று கொண்டிருக்கும் போது, உளுந்தூர்பேட்டை அருகே லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சாகுல் ஹமீது சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இவர் 150க்கும மேற்பட்ட சினிமாப்பாடல்களையும், 350க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.
சாகுல் ஹமீது விபத்தில் மரணமடைந்ததையடுத்து அவரது மனைவி மும்தாஜ் ஹமீது, அவரது இரு குழந்தைகள்மற்றும் பெற்றோர் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,
எனது கணவர் சாகுல் ஹமீது பல சினிமாப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். சினிமாப் பாடல்ஒன்றுக்கு ரூ.5,000மும், பக்திப் பாடல் ஒன்றுக்கு ரூ.2,500ம் சம்பளமாகப் பெற்றுக் கொண்டிருந்தார். மேலும்ஜெண்டில்மேன் ஆர்கெஸ்ட்ரா என்ற பெயரில் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் பணம் சம்பாதித்துவந்தார்.
இந்நிலையில் 1997ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி அவர் காரில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த கஸ்தூரிஎன்பருக்கு சொந்தமான லாரி மோதி சாகுல் ஹமீது சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார்.
இதனால் எங்கள் குடும்பத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. லாரி டிரைவரின் கவனக்குறைவாலும்,வேகமாக ஓட்டி வந்ததாலும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
லாரி ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே எங்கள் குடும்பத்திற்கு லாரி உரிமையாளர் கஸ்தூரியும், ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனமும் சேர்ந்து ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை விசாரித்த சென்னை மோட்டார் விபத்து தீர்ப்பாயத் தலைமை நீதிபதி ராமச்சந்திரன் தனது தீர்ப்பில்கூறியிருப்பதாவது,
பாடகர் சாகுல் ஹமீது உயிருடன் இருந்திருந்தால், மாதம் ரூ.11 ஆயிரம் சம்பாதித்து இருப்பார். அதில் ரூ.7,500 ஐகுடும்பச் செலவுக்காகக் கொடுத்திருப்பார்.
அவர் இறந்துவிட்டதால் குடும்பத்துக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவரது குடும்பத்துக்கு லாரிஉரிமையாளர் கஸ்தூரியும், ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து ரூ.15 லட்சம் ரூபாயை 9 சதவீதவட்டியுடன் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.
இந்தத் தொகையில் சாகுல் ஹமீதின் மனைவிக்கு ரூ. 8 லட்சத்து 50 ஆயிரமும், பெற்றோருக்கு தலா ரூ.75,000 மும்,குழந்தைகள் இருவருக்கும் தலா ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில்கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications