தமிழகத்தில் 12,000 எய்ட்ஸ் நோயாளிகள்
சென்னை:
தமிழகத்தில் 12,000 எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
திருநெல்வேலியில் சமீபத்தில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இந்தகருத்தரங்கில் இந்தியாவிலேயே அதிக அளவிலான எய்ட்ஸ் நோயாளிகள் தமிழகத்தில்தான் இருப்பதாகதெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது 12,000 எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது கடந்த ஆண்டை விடகுறைவாக இருந்தாலும் கூட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.
தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில்தான் அதிகஅளவிலான எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் லாரி டிரைவர்கள் அதிகம் இருப்பதாலும், லாரிப் போக்குவரத்து அதிகம்இருப்பதாலும் அந்த மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை விட அதிக அளவில் எய்ட்ஸ் மற்றும் பிற பால்வினைநோயாளிகள் அதிகம் உள்ளனர்.
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை மற்றும் கன்னியாகுமரி-சென்னை நெடுஞ்சாலைகளில் அதிக அளவிலானவிபச்சாரிகள் இரவு நேரங்களில் உலவுவதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் முக்கிய நெடுஞ்சாலைகளில் போலீஸ் ரோந்தை அதிகப்படுத்தினால் விபச்சாரிகளின்நடமாட்டத்தைக் குறைக்கவும், இதன் மூலம் எய்ட்ஸ் மற்றும் பிற பால்வினை நோய்களைக் கட்டுப்படுத்தவும்முடியும் என்றும் அந்த ஆய்வில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாபலிபுரம் உள்ளிட்ட சில முக்கிய சுற்றுலாத் தலங்களில் விபச்சாரிகளின் நடமாட்டத்தைக் குறைக்கவும் அரசுக்குயோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications