அதிகாரிகள் சென்னை வந்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அமெரிக்க உளவு ஹெலிகாப்டர் அத்துமீறி கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தின் மீது பறந்தது தொடர்பாகவிசாரணை நடத்த டெல்லி, மும்பையிலிருந்து ராணுவ, உளவுத்துறை, விமானத்துறை அதிகாரிகள் சென்னைவந்தனர்.

ஆப்கானிஸ்தானில் போர் நடவடிக்கைகளில் உதவுவதற்காக வளைகுடாவுக்கு செல்லும் வழியில் ஜப்பானிலிருந்துயு.எஸ்.எஸ். ஜான் யங் என்ற இந்தக் கப்பல் சென்னை வந்தது.

எரிபொருள் நிரப்புவதற்காக வந்த இந்தக் கப்பலில் இருந்து உளவு ஹெலிகாப்டர் திடீரென பறந்து கல்பாக்கம்அணு மின் நிலையத்தை நள்ளிரவில் சோதனையிட்டது.

இந்தப் பிரச்சனை நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரும்போராடாத்தில் ஈடுபட்டன. இதையடுத்து உடனடியாக இது தொடர்பாக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்என ராஜ்யசபா துணைத் தலைவர் பி.எம்.சயீத் உத்தரவிட்டார்.

இதனால் அமெரிக்க-இந்திய உறவில் பிரச்சனை வரலாம் என்பதால் இதை முதலில் மூடி மறைக்க முயன்ற மத்தியஅரசு, பி.எம்.சயீதின் உத்தரவையடுத்து அரைகுறை மனதுடன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஹெலிகாப்டரின் அத்துமீறல் குறித்து விவாதிக்க மத்திய விமானப் பாதுகாப்புத்துறைச் செயலாளர் ராம்பட்தலைமையிலான அதிகாரிகள் இன்று சென்னை வந்தனர். இவர்களுடன் சென்னை விமான நிலைய பொதுமேலாளர் சுப்பிரமணியனும் இது தொடர்பாக விசாரணை நடத்துவார்.

விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், கப்பலின் கேப்டன் ஆகியோரிடம் இந்த விசாரணை நடக்கும்.இவர்கள் விசாரணை விவரத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பர். இதையடுத்து ராஜ்யசபாவில் மத்திய அரசுஅறிக்கை தாக்கல் செய்யும்.

இது தவிர மத்திய உளவுத் துறை அதிகாரிகளும் சென்னை வந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+