ஆவின் பால் விலை ரூ.16.50 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆவின் நிறுவனம் தமிழகத்தில் பால் விலையை 2 ரூபாய் அதிகம் உயர்த்தியுள்ளது.
முதலில் லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரேயடியாக 2 ரூபாய்அதிகரிக்கப்பட்டுள்ளது.
பூத்களில் வழங்கப்படும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் லிட்டருக்கு ரூ.10.50லிருந்து ரூ.12.50க்கு விற்கப்படும்.கொழுப்புடன் கூடிய பால் லிட்டருக்கு ரூ.13 லிருந்து ரூ.15 ஆக விற்கப்படும்.
தானியங்கி பால் வழங்கும் நிலையங்களில் விற்கப்படும் பால் லிட்டருக்கு ரூ.12.50 லிருந்து ரூ.14.50க்குவிற்கப்படும்.
இந்த கட்டண உயர்வு நாளை (சனிக்கிழமை, டிச.1) முதல் அமலுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications