சென்னை-பெங்களூர் சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து பெங்களூருக்கு நாளை (சனிக்கிழமை, டிச.1) சிறப்பு ரயில் விடப்படுகிறது.
சென்னை-பெங்களூர் மார்க்கத்தில் ரயில்களில் அதிக கூட்டம் இருப்பதால் வரும் டிசம்பர் 1 ம் தேதி சிறப்பு ரயில்விட தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 1ம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.15மணிக்கு பெங்களூரை சென்றடையும்.
பின்னர் மறு மார்க்கத்தில் டிசம்பர் 2ம் தேதி இரவு 11.30 மணிக்கு பெங்களூரிலிருந்து கிளம்பி அடுத்த நாள் காலை7.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, பங்காருபேட்டை ஆகிய இடங்களில் நின்று செல்லும்என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications