சாவு எண்ணிக்கை 53 ஆக உயர்வு
கடலூர்:
கடலூர் அருகே கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 பேரின்நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் 247 ஆகஉயர்ந்துள்ளது. மேலும் பலர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட வண்ணம் உள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நத்தம் மற்றும் அருங்குணம் கிராமங்களில் நூற்றுக்கணக்கான விவசாயக்கூலித் தொழிலாளர்கள் வியாழக்கிழமை இரவு கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்தனர்.
சாராயத்தைக் குடித்தவுடனேயே பலர் சுருண்டு விழுந்து இறந்தனர்.
இதில் சாராயம் விற்ற சின்னப் பொண்ணு என்ற பெண் உள்பட மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர்.
நேற்று சாவு எண்ணிக்கை 13ல் ஆரம்பித்து 26 ஆக உயர்ந்தது. இரவிலும் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து சாவுஎண்ணிக்கை 36ஆகிவிட்டது. இன்று காலை மேலும் 10 பேர் இறந்தனர். பகல் 1 மணி வரை சாவு எண்ணிக்கை 53ஆகிவிட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரும் மிகவும் மோசமான உடல் நிலையில் உள்ளனர். இதில் 30 பேர்உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளனர். இவர்களில் பலரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள்தெரிவித்தனர்.
சாராயத்தில் மெத்தனால் கலந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications