அமெரிக்க குண்டு வீச்சில் 200 கிராமத்தினர் பலி
காண்டஹார்:
கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 200 கிராம மக்கள்பலியானார்கள்.
இதில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தபக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
ஆனால் 15 முதல் 20 பேர் வரை மட்டுமே இதில் கொல்லப்பட்டதாக நாங்கர்ஹார் பகுதி பாதுகாப்பு அதிகாரிஒருவர் கூறினார்.
"பொதுமக்கள் இருக்கும் இடங்களில் குண்டு வீசாதீர்கள் என்று நாங்கள் கேட்டுக் கொண்ட உடனே அமெரிக்கவிமானங்கள் தங்கள் தாக்குதலை அப்பகுதியில் நிறுத்தி விட்டன" என்றும் அவர் கூறினார்.
ஆனால் இந்தக் குண்டு வீச்சுச் சம்பவத்தை பெண்டகன் மறுத்துள்ளது.
காண்டஹார் மீது தொடர்ந்து குண்டு மழை
இதற்கிடையே காண்டஹாரில் உள்ள தலிபான்களின் நிலைகள் மீது அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கின்றன.
காண்டஹாரை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளதால்,அமெரிக்க இந்நகரை மிகவும் கடுமையாக தாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் காண்டஹார் மீது அமெரிக்க விமானங்கள் மிகப் பயங்கரமாகக் குண்டு வீசி வருகின்றன.
வேகமாக முன்னேறும் நார்த்தர்ன் அலையன்ஸ்
நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரும் காண்டஹார் நகரை நோக்கி அங்குலம் அங்குலமாக, ஆனால் வெகுவேகமாக முன்னேறி வருகின்றனர்.
காண்டஹார் நகரைச் சுற்றிலும் இப்படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.
தலிபான்களின் நிலைகள் மீது அமெரிக்க விமானங்களும் கடுமையான குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்திக் கொண்டுவருவதால், நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் படு சுறுசுறுப்புடன் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications