அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்: இளங்கோவன்
சென்னை:
நிதிநெருக்கடியைச் சமமாளிக்க மக்கள் வயிற்றில் அடிக்காமல் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன்மூலம் செலவைக் குறைக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
பஸ் கட்டணம், மின் கட்டணம், அரிசி விலை, பால் விலை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையைதமிழக அர உயர்த்தியுள்ளது. அரசின் நிதிநெருக்கடியைச் சமாளிக்க இந்த விலையேற்றம்அமேல்படுத்தப்படுவதாக தமிழக அர அறிவித்தள்ளது.
இந்த திடீர் விலையேற்றத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் வரும் 7ம் தேதி பந்த் நடத்தத்திட்டமிட்டமிட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறுகையில்:
தமிழக அரசின் திடீர் விலையேற்ற அறிவிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தத்திட்டமிட்டுள்ள பந்த்தில் திமுகவும் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு நிதிநெருக்கடியைச் சமாளிக்க வேண்டுமானால் மத்திய அரசிடம் கேட்கலாம். அல்லது தற்போதுள்ளஅமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் வீண் செலவுகளைக் குறைக்கலாம்.
அதை விடுத்த பொதுமக்களின் வயிற்றில் கைவைப்பது அநியாயம். மேலும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த அனைத்து சலுகைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
சட்டசபைக்கு வெளியே இவ்வாறு ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.அதிமுகவினரைப் பொறுத்தவரை சட்டசபை ஒரு பொழுதுபோக்குக் கூடம் தான்.
கடந்த ஆறுமாத கால ஆட்சியில் அதிமுக அரசு, முதலமைச்சரையும், 6 அமைச்சர்களையும் மாற்றியுள்ளது.இதுதான் அதிமுக அரசு செய்துள்ள சாதனை.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
எதிர்கட்சிகள் அறிவித்துள்ள இந்த பந்த்தில் திமுக கூட்டணிணில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி கலந்துகொள்ளமறுத்துவிட்டது. ஆனால், தனியாக தங்களது எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிப்பதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications