புத்தாண்டு முதல் புதிய ரேஷன் கார்டு
சென்னை:
வண்ணங்களில் வழங்கப்படும் ரேஷன் கார்டுகளை நிறுத்திவிட்டு தமிழகத்தில் வரும் புத்தாண்டு முதல்அனைவருக்கும் புதிய ரேஷன் கார்டு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் 1998ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் வண்ண முறையால்பிரிக்கப்பட்டனர். அதன்படி வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு இளஞ்சிவப்பு, நடுத்தரவர்க்கத்தினருக்கு மஞ்சள், மேல் மட்டத்தினருக்கு பச்சை என்று பிரித்து அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட கணக்குப்படி ஒரு கோடியே 61 லட்சத்து 16 ஆயிரத்து 360 ரேஷன்கார்டுகள் உள்ளன.
தமிழக அரசு தற்போது அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கிலோ ரூ.3 வீதம் அரிசியை வழங்கி வருகிறது.
ஆனால் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மத்திய அரசு 97 ஆயிரத்து 256 மெட்ரிக் டன் அரிசியைரூ.5.65 விலையில் வழங்குகிறது. வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கு 38 ஆயிரத்து 440 மெட்ரிக் டன்அரிசியை ரூ.8.30 விலையில் வழங்குகிறது.
இதனால் ஆண்டுக்கு ரூ.265 கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்கபடுகிறது.
எனவே வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டும் கிலோ ரூ.3.50 விலையில் அரிசி மற்றவர்களுக்குரூ.9.00 என்று அரசு அறிவித்துள்ளது.
வண்ண கார்டுகள் முறையில் நடுத்தர வர்க்கத்தினருக்கும், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கும்கார்டுகள் வழங்கப்பட்டதில் பெரும் குளறுபடிகள் நடந்தன. இந்தக் கார்டுகளை ஒழிக்க அரசு தற்போதுமுடிவெடுத்துள்ளது.
போலி கார்டுகளை ஒழிக்கவும், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் மற்றும் நடுததர வர்க்கத்தினரை பிரித்துஅடையாளம் காண்பதற்காகவும் வண்ணங்களில் கார்டுகள் வழங்கப்படுவதை அடியோடு ஒழிக்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் புதிய கார்டுகள் வடிவமைக்கப்பட்டு வரும் புத்தாண்டில் அனைவருக்கும் புதிய ரேஷன் கார்டுவழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications