தூத்துக்குடியில் ஒரே நாளில் 19 பேருக்கு "ஆயுள் தண்டனை" தீர்ப்புகள்
தூத்துக்குடி:
தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஒரே நாளில் பல்வேறு வழக்குகளில் 19 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கிதீர்ப்பளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் வடக்குவண்டானத்தைச் சேர்ந்த தீப்பெட்டித் தொழிற்சாலை அதிபர்களான சரவணன் (35) -துரைப்பாண்டியன் (20) சகோதரர்களை அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தீப்பெட்டி தொழிலதிபர் பொன்னுச்சாமி(35) என்பவர் தன் தம்பிகள் உள்பட 13 பேரின் உதவியுடன் வெட்டிக் கொன்றார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 14 பேரையும் கைது செய்த போலீசார், தூத்துக்குடி மாவட்ட செசன்ஸ்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். சிவப்பிரகாசம் கடந்த வெள்ளிக்கிழமை (நவ.30) அளித்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட 14 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
பொன்னுச்சாமிக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை அவர் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும்என்றும், மற்ற 13 பேரும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதே தூத்துக்குடி நீதிமன்றத்தில், அதே நாளில் மேலும் பல்வேறு வழக்குகளில் 5 பேருக்கு ஆயுள் தண்டனைவழங்கப்பட்டது.
இதையடுத்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஒரே நாளில் 19 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்புகூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications