ஜீவஜோதியின் கணவர் உடலைக் கடத்த முயற்சி
கொடைக்கானல்:
சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலின் ஆட்களால் கொலை செய்யப்பட்ட ஜீவஜோதியின் கணவர்சாந்தகுமாரின் உடலை அவர்கள் கடத்தும் முயற்சியிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் வீசப்பட்ட சாந்தகுமாரின் உடல் பெரிய பள்ளத்தில் விழுந்து விட்டதாகத்தான்கொலையாளிகள் நினைத்துள்ளனர்.
ஆனால் 20 அடி ஆழத்தில்தான் பிணத்தைக் கண்டெடுத்தனர் கொடைக்கானல் போலீசார். கொலை செய்யப்பட்டமூன்று நாட்கள் கழித்து அப்பிணத்தைக் கைப்பற்றிய போலீசார், பல்வேறு கோணங்களில் அதைப் புகைப்படம்எடுத்து விட்டு, போஸ்ட்மார்ட்டம் நடந்த பிறகு புதைத்து விட்டனர்.
போலீசாரிடம் பிணம் சிக்கி விட்டதை அறிந்த கொலையாளிகள், கொடைக்கானல் அரசு மருத்துவமனையிலிருந்துசாந்தகுமாரின் உடலைக் கடத்திச் சென்று அழித்து விடத் திட்டம் போட்டுள்ளனர்.
ஆனால், அங்குள்ள டாக்டர்கள் ஒத்துழைக்காத காரணத்தால் அவர்கள் சென்னை திரும்பிவிட்டதாகக்கூறப்படுகிறது.
ஜீவஜோதி கதறல்
இதற்கிடையே சாந்தகுமாரின் பிணம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தோண்டி எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்காக அவருடைய மனைவி ஜீவஜோதி, அவரது தாயார் தவமணி, தந்தை ராமசாமி, மாமாக்கள் முத்தரசு மற்றும்தசமணி ஆகியோர் நேற்று காலை 11.30 மணிக்கு போலீஸ் நிலையம் வந்தனர்.
சாந்தகுமாரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஜீன்ஸ் பேண்ட், சட்டை, பெல்ட் மற்றும் போட்டோக்களைஜீவஜோதியிடம் போலீசார் காட்டினர். அவற்றைப் பார்த்து ஜீவஜோதி கதறி அழுதார்.
கொலையை மறைக்க ஜீவஜோதியே முயற்சி?- போலீசார் சந்தேகம்
சில நாட்களுக்கு முன் சென்னையில் ஜீவஜோதி பேட்டியளிக்கும்போது, "என் கணவருக்கு கருமாதி செய்தது போலசடங்குகளைச் செய்தேன்" என்று தெரிவித்தார்.
அவர் "கருமாதி" என்ற வார்த்தையை அப்போது பயன்படுத்தியதால், தற்போது போலீசார் அவரையும்சந்தேகப்படுகின்றனர். கணவர் சாந்தகுமார் இறந்த விபரம் ஜீவஜோதிக்கு முன்பே தெரிந்திருக்கலாம் என்றுபோலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனால், சாந்தகுமார் கொலை வழக்கில் ஜீவஜோதியும் குற்றவாளியாகச் சேர்க்கப்படலாம் என்று போலீஸ்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாக்குமூலம் கொடுத்தவர் திடீர் பல்டி
இந்நிலையில், சாந்தகுமாரை நாங்கள் கொல்லவே இல்லை. இப்போதுதான் கொடைக்கானலுக்கே முதல் முறையாகவருகிறோம். எல்லாவற்றையும் நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறோம் என்று முக்கியக் குற்றவாளியானடேனியல் நிருபர்களிடம் கூறினார்.
சாந்தகுமாரைக் கொலை செய்த விஷயத்தை போலீசாரிடம் கூறி, உடலை வீசிய இடத்தை அடையாளம்காட்டியவர் டேனியல் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications