சிறைக் கலவரத்தில் ஈடுபட்ட 80 தலிபான்கள் சரண்

Subscribe to Oneindia Tamil

காபூல்:

ஆப்கானிஸ்தானின் மசார்-ஏ-ஷெரீப் நகரில் உள்ள சிறைச்சாலையில் கலவரம் செய்த 80க்கும் மேற்பட்ட தலிபான்கைதிகள் சரணடைந்தனர்.

கடந்த நவம்பர் 25ம் தேதி சிறைக் காவலர்களின் துப்பாக்கிகளைத் திடீரென்று பறித்துக் கொண்டநூற்றுக்கணக்கான தலிபான் கைதிகள், அங்கு பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

சிறைக் காவலர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு, தப்பி ஓடவும் முயற்சி செய்தனர். சிறைக் காவலர்களும்அவர்களைச் சமாளிக்க முடியாமல் பெரிதும் திணறினர்.

இதையடுத்து, அமெரிக்க விமானங்கள் பறந்து வந்து இந்தச் சிறைச்சாலை மீது குண்டுகளை மழையாகப்பொழிந்துவிட்டுச் சென்றன.

இதில் சுமார் 700 தலிபான் சிறைக் கைதிகள் கொல்லப்பட்டனர். ஆனாலும் மீதமிருந்த கைதிகள் தொடர்ந்துகலவரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் 80க்கும் மேற்பட்ட தலிபான் கைதிகள் கலவரத்தைக் கைவிட்டு சரணடைந்துள்ளனர். இவர்களில்பெரும்பான்மையானவர்கள் பாகிஸ்தானியர்கள் மற்றும் அராபியர்கள் ஆவர்.

கடந்த ஆறு நாட்களாக இவர்களுக்கு சரியான உணவு, நீர் வழங்கப்படாததைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல்அவர்கள் சரணடைந்து விட்டனர்.

காண்டஹார் மீது குண்டு மழை

இதற்கிடையே காண்டஹார் நகரைப் பிடிப்பதற்காக அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து அந்நகரில் உள்ளதலிபான் நிலைகள் மீது குண்டு மழை பொழிந்து வருகின்றன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முழுவதும் குண்டுவீச்சுத் தாக்குதல் நடந்தது.

இதற்கிடையே அமெரிக்க மெரைன் வீரர்கள் காண்டஹார் விமானத் தளத்தில் முகாமிட்டுள்ளனர். நார்த்தர்ன்அலையன்ஸ் படையினரோ காண்டஹார் நகரை நோக்கி அங்குலம் அங்குலமாக முன்னேறி வருகின்றனர்.

தலிபான்கள் பிடியில் இந்த ஒரு நகர் மட்டுமே இருப்பதால், எப்படியும் தங்கள் கைப்பிடியிலேயே இந்நகரைவைத்திருக்க தலிபான்கள் பெரிதும் முயன்று வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் தாக்குதல் மிகக் கடுமையாகஉள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+