கிரிக்கெட்: தாஸ் குப்தாவுக்கு முதல் டெஸ்ட் செஞ்சுரி
மொஹாலி:
இங்கிலாந்துக்கு எதிராக மொஹாலியில் நேற்று (திங்கள்கிழமை) துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில், தாஸ்குப்தா அடித்த அபார செஞ்சுரி மூலம் இந்திய அணி ஓரளவு கவுரமிக்க ஸ்கோரை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் என்ற தன் முதல் இன்னிங்ஸ் ஸ்கோருடன் இன்று காலை இரண்டாவது நாள்ஆட்டத்தை ஆரம்பித்தது இந்திய அணி.
தாஸ் குப்தாவும் அனில் கும்ப்ளேவும் சளைக்காமல் பந்துகளை அடித்து விளாச ஆரம்பித்தனர். இதனால் இந்தியஅணியின் ஸ்கோர் மளமளவென்று உயர ஆரம்பித்தது.
ஆனால் 35வது ஓவரின் கடைசிப் பந்தில் இங்கிலாந்தின் டாவ்சனின் பந்தை போஸ்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட்ஆனார் கும்ப்ளே (37 ரன்கள்). இவர் 6 பவுண்டரிகளையும் அடித்தார்.
இதையடுத்து ராகுல் டிராவிட் களமிறங்கினார். டிராவிட்டும் தாஸ் குப்தாவும் பொறுப்புடனும் பொறுமையுடனும்விளையாடி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய முதலாவது டெஸ்ட் செஞ்சுரியையும்தாஸ் குப்தா இன்று எடுத்தார்.
ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கிடையே 100 ரன்களை எட்டிய தாஸ் குப்தா, அந்தப் பதட்டத்திலேயேஒயிட்டின் பந்து வீச்சில் கிளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 82.3ஓவரில் 212ஆக இருந்தது.
இதுதான் தாஸ் குப்தாவின் முதல் செஞ்சுரி என்பது குறிப்பிடத்தக்கது. 254 பந்துகளைச் சந்தித்த அவர் 15பவுண்டரிகளையும் அடித்தார்.
பின்னர் வந்தார் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர். இவர் வந்தவுடன் இந்திய அணியின்ஸ்கோர் முன்பை விட மளமளவென்று ஏறத் தொடங்கியது.
ஆனால் முழு வீச்சில் டிராவிடும் டெண்டுல்கரும் விளையாட ஆரம்பிக்கும் முன்னரே, இந்திய அணியின் 262ரன்கள் என்ற ஸ்கோருடன் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆட்ட நேர இறுதியில் டெண்டுல்கள் 53 பந்துகளைச் சந்தித்து ஐந்து பவுண்டரிகளுடன் 31 ரன்களைஎடுத்திருந்தார். டிராவிடோ 194 பந்துகளில் 78 ரன்களைக் குவித்திருந்தார். அவருடைய எண்ணிக்கையில் 11பவுண்டரிகளும் அடக்கம்.
2வது நாள் இறுதி ஸ்கோர் விவரம்:
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து - 238/10 (76.3 ஓவர்கள்)
இந்தியா - 262/3 (101 ஓவர்கள்)
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications