ஜெ.வின் அடுத்த கட்ட அதிரடி தயார்: மூத்த அமைச்சர்களுக்கு கல்தா?
சென்னை:
பன்னீர்செல்வம் அமைச்சரவையில் உள்ள சில மூத்த அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கி அதிர்ச்சி வைத்தியம்அளிக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
டான்சி வழக்கிலிருந்து வெளியே வந்து விட்டார் ஜெயலலிதா. அடுத்து ஆண்டிப்பட்டியில் போட்டியிடப்போகிறார். அதன் பின்னர் மீண்டும் முதல்வர் பதவியில் அமரப் போகிறார். அதற்கு முன்னரே சில அதிர்ச்சிவைத்தியங்களை அமைச்சர்களுக்கு அவர் அளிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
மூத்த அமைச்சர்கள் சிலரின் நடவடிக்கைகள் குறித்து ஜெயலலிதா அதிருப்தியுடன் உள்ளதாகக் கூறப்படுகிறது.அமைச்சரவை பொறுப்பை அலட்சியமாகவும், அக்கறை இல்லாமலும் அவர்கள் கவனித்து வருவதாகஜெயலலிதாவின் காதுகளுக்குப் போயுள்ளது.
மேலும், முதல்வர் என்ற மரியாதையை பன்னீர்செல்வத்திற்கு அவர்கள் அளிக்கவில்லை என்பதை ஜெயலலிதாசீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. என்னதான் பன்னீர்செல்வம் தாற்காலிக முதல்வர்என்றாலும் கூட அவரது பதவிக்குரிய மரியாதையை இவர்கள் கொடுக்காததை பெரிதாக எடுத்துக்கொண்டுள்ளாராம் ஜெயலலிதா.
தற்போதைக்கு 3 அமைச்சர்களின் பதவி ஆட்டம் காணுவதாக கூறப்படுகிறது. அவர்களில் முக்கியமானவர்ஜெயலலிதா முன்பு போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியின் மாவட்டத்துக்காரர். ஜெயலலிதாவின் பார்வைக்குப்போகமலேயே பல காரியங்களை இவர் செய்து கொண்டிருப்பதாக கட்சி வட்டாரத்தில் பலமாக பேசப்படுகிறது.
மேலும், பன்னீர்செல்வம் எனக்கு ரொம்ப ஜூனியர். அகில இந்திய அளவில் பெரிய பதவியில் இருந்தவன் நான்,பன்னீர் செல்வத்திடம் அனுமதி கேட்டு விட்டு செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று தனக்கு நெருங்கியசகாக்களிடம் அந்த அமைச்சர் கூறியதாக வெளியான செய்திகள் ஜெயலலிதாவை அப்செட் செய்துள்ளதாகக்கூறப்படுகிறது.
முதலில் இவர்தான் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. அதேபோல, இன்னொரு சீனியர்அமைச்சர் மீது அதிகாரிகளை மதிப்பதில்லை என்று புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் இவரின் நிர்வாகத்திறமையின்மையையும் ஜெயலலிதா கருத்தில் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அதிகாரம் தனது பக்கம் திரும்பியுள்ள நிலையில் பதவிக்கு வரும் முன்பே பல குழப்பங்களை சரி செய்யஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில காவல்துறை அதிகாரிகளை மாற்றவும் ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ள ஜெயலலிதா, பாரதீய ஜனதாக் கட்சியினர் எந்தஉதவி கோரி வந்தாலும் காத்திருக்க வைக்காமல் உடனடியாக முடித்துத் தர அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications