நாளை ஜெயலலிதா முதல்வராக பதவியேற்பு?
சென்னை:
ஜெயலலிதா வியாழக்கிழமை மாலை முதல்வராகப் பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது.
தனக்குத் தடையாக இருந்த டான்சி வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையாகி விட்டார். இதைத் தொடர்ந்து அவர் உடனடியாகமீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என அதிமுக தலைவர்களும் தொண்டர்களும் வற்புறுத்து வருகின்றனர்.
அவர் வியாழக்கிழமை மீண்டும முதல்வராக பதவியேற்கலாம் என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.வியாழக்கிழமை நல்ல நாள் என்று அவருக்கு ஜோதிடர்கள் தேதி குறித்துக் கொடுத்துள்ளதாக பேசிக் கொள்கிறார்கள்.
அதிலும், மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் பதவியேற்க நல்ல சகுனம் என்று ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்துள்ளார்களாம்.அப்படி இல்லாவிட்டால் 7ம் தேதி பிற்பகல் 1.30 மணியளவில் பதவியேற்கலாம் என்று ஜோதிடர்கள் ஆலோசனைகொடுத்துள்ளார்களாம்.
இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைக்குள் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கருத்துக்கு வலுவூட்டும் விதத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னையிலேயேஇருக்குமாறு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னையை விட்டு அடுத்த இரண்டு நாட்களுக்கு எங்கும் போக வேண்டாம் என்றும் எம்.எல்.ஏ. விடுதியிலேயே இருக்குமாறும்அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீண்டும் பதவியேற்கும் ஜெயலலிதா அமைச்சரவையில் உள்ள 7 அமைச்சர்களை நீக்கவும் முடிவு செய்துள்ளதாகக்கூறப்படுகிறது.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications