ஆப்கானிஸ்தான் 22ம் தேதி புதிய ஆட்சி பதவியேற்கும்:துணைப் பிரதமராக பெண் நியமனம்
பான் (ஜெர்மனி):
ஆப்கானிஸ்தானின் துணைப் பிரதமராக முதல்முறையாக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார். நலத்துறைஅமைச்சராகவும் மற்றொரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமராக அமெரிக்க ஆதரவாளரான ஹமித் கர்சாய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆப்கானிஸ்தான் பழங்குடிப்பிரிவைச் சேர்ந்தவர். தலிபான்களைப் போலவே புஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர்.
முன்னதாக பிரதமராக முன்னாள் மன்னர் ஷகீர் ஷாவின் ஆதரவாளரான அப்துல் சத்தார் சிராத் நியமிக்கப்படலாம்என்று கூறப்பட்டது. ஆனால், இவர் உஸ்பெக் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், இவரை புஷ்தூன் பழங்குடியினர்ஏற்க மாட்டார்கள் என்பதாலும் அந்தப் பதவிக்கு கர்சாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
துணைப் பிரதமராக சிமா சமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் அந் நாட்டில் உயர் பதவியைப் பிடிக்கும் முதல்பெண்மணியாவார். இவர் பெண்கள் நலத்துறை அமைச்சராகவும் இருப்பார். அதே போல நலத்துறைஅமைச்சகராக சுகைலா சித்திக் என்ற பெண் நியமிக்கப்படவுள்ளார்.
இந்த அரசு வரும் டிசம்பர்-22ம் தேதி பதவியேற்கும். ஜெர்மனியில் பான் நகரில் கடந்த 9 நாட்களாக நார்த்தர்ன்அலையன்ஸ், ஷகீர் ஷா, ஈரான ஆதரவுக் குழு, பாகிஸ்தான் ஆதரவுக் குழுவுக்கு இடையே நடந்து வந்த கூட்டத்தில்இதற்கான உடன்பாடு ஏற்பட்டது.
இன்று இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
தலிபான்களின் ஆட்சியில் மதத்தின் பெயரால் பெண்கள் பெரும் கொடுமைகளை அனுபவித்து வந்த நிலையில்,பெண்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரதமர், துணைப் பிரதமர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கும் பொறுப்பை நார்த்தர்ன் அலையன்ஸ் படைமுன்னாள் மன்னர் ஷகீர் ஷாவுக்கு விட்டுக் கொடுத்து பெருந்தன்மையுடன் நடந்து கொண்டுள்ளது. நாட்டின்பெரும் பகுதி இப்போது இந்தப் படையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
இந்தப் படையினர் உஸ்பெக், தஜிக், ஹஸாரா போன்ற சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். இதையடுத்துநாட்டில் பெரும்பான்மையாக உள்ள புஷ்தூன் இனத்தினருக்கு (ஷகீர் ஷா இந்த இனத்தவர்) முக்கிய பதவிகளைவிட்டுக் கொடுத்துள்ளனர்.
ஆனால், பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை, உள்துறை அமைச்சகங்களை நார்த்தர்ன் அலையன்ஸ் தன் வசம்வைத்திருக்கும். வெளியுறவுத்துறை அமைச்சராக டாக்டர் அப்துல்லா அப்துல்லாவும், பாதுகாப்பு அமைச்சராகமுகம்மத் காசிம் பகீமும், உள்துறை அமைச்சராக யூனுஸ் கானூனியும் தொடர்வார்கள். இவர்கள் மூவரும் தஜிக்இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் அல்-காய்தா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட நார்த்தர்ன் அலையன்ஸ் படையின் தலைவரும்இந்தியா-ரஷ்யாவின் தீவிர நண்பருமான அகமத் ஷா மசூதுக்கு மிக நெருக்கமானவர்கள்.
விட்டுக் கொடுத்த நார்த்தர்ன் அலையன்ஸ்:
பெரும் இழுபறிக்கு இடையே நேற்று முன்தினம் தான் இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இடைக்கால அரசின் தலைவரை ஷகீர் ஷாநியமித்துக் கொள்ளலாம் என நார்த்தர்ன் அலையன்ஸ் கூறியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை வெற்றி பெற்றது. முதலில் தங்கள் ஜனாதிபதி புர்ஹானுதீன்ரப்பானியைத் தான் இடைக்காலப் பிரதமராக நியமிக்க வேண்டும் என நார்தத்ர்ன் அலையன்ஸ் கூறி வந்தது.
இதையடுத்து இன்று தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் இடைக்கால அரசின் தலைவராக ஹமித் கர்சாயை நியமிப்பதாக ஷகீர் ஷாவின் பிரதிநிதிகள்தெரிவித்தனர். தலிபான ஆட்சியில் இருந்தபோதே அமெரிக்க யோசனைப்படி ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டுவந்தவர் கர்சாய். தீவிர அமெரிக்க ஆதரவாளரான இவர் ஆப்கானிஸ்தானின் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்.
இவரது தந்தையை தலிபான்கள் தூக்கில் போட்டுக் கொன்றனர். இப்போதும் காண்டஹாரில் தலிபானகளை எதிர்த்துப் போராடி வரும் நார்தத்ர்ன்அலையன்சுக்கு கர்சாய் உதவி வருகிறார். பழங்குடி இனத்தினரின் உதவியுடன் காண்டாரின் விமான நிலையத்தைப் பிடிக்கவும் உதவியவர் ஹமித் கர்சாய்.
அரசின் கடமை என்ன?
இவரது ஆட்சி 6 மாதம் நீடிக்கும்.
இந்த ஆட்சி காலத்தில் ஆப்கானிஸ்தான் பழங்குடித் தலைவர்களின் கூட்டம் (லோயா ஜிர்கா) நடத்தப்படும்.
இந்தக் கூட்டத்தில் அடுத்த அரசு அமைக்கப்படும். இந்த அரசு அடுத்த ஒன்றரை வருடம் ஆட்சியில் இருக்கும். ஆப்கானிஸ்தானுக்கு புதிய அரசியல்சட்டத்தை இந்த அரசு உருவாக்கும். ஒன்றரை ஆண்டின் முடிவில் தேர்தலை இந்த அரசு நடத்தும்.
இந்த ஒப்பந்தங்கள் தொடர்பான இறுதி அறிக்கையில் இன்று நார்த்தர்ன் அலையன்சும், ஷகீர் ஷாவும் இன்று கையெழுத்திட்டனர். அப்போது ஜெர்மன்அதிபர் ஸ்ரேடரும், ஐக்கிய நாடுகள் சபையின் பார்வையாளர்களும் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications