ஊட்டி அருகே 3 ஏக்கர் கஞ்சா தோட்டம் அழிப்பு: ஒருவர் கைது
ஊட்டி:
ஊட்டி அருகே 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சாச் செடிகள் போலீசாரால் எரித்து அழிக்கப்பட்டது.இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊட்டி அருகே புலிக்குண்டா என்ற ஊரில் ஒருவர் கஞ்சா பயிரிட்டிருப்பதாக போலீசாருக்குத் தகவல் வந்தது.இதையடுத்து, வனத்துறை அதிகாரிகளுடன் குறிப்பிட்ட அந்த நிலத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்நிலத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பதைக் கண்ட போலீசாரும்வனத்துறையினரும் அதிர்ந்து போயினர். பின்னர் அந்தக் கஞ்சா செடிகள் முழுவதும் எரித்து அழிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்துகைத்துப்பாக்கி, 20 துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் சில வெடி பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.
அவரிடம் மேலும் விசாரித்த போது, எர்ணாகுளம், பெங்களூர், கூடலூர் மற்றும் நீலகிரி ஆகிய ஊர்களைச் சேர்ந்த10 பேர் இங்கு விளைந்த கஞ்சாவை வைத்து வியாபாரம் செய்தது தெரிய வந்தது.
இதற்கிடையே கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எடக்காடு கிராமத்தில் கஞ்சா கடத்த முயன்றதாக தேனி மற்றும்திண்டுக்கல்லைச் சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications