மேட்டூர் மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளியை வெட்டிக்கொன்ற கும்பல்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவரை பயங்கர ஆயுதங்களுடன்உள்ளே புகுந்த கும்பல் வெட்டிக் கொன்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூரைச் சேர்ந்த ஜகதீசன் என்பவருக்கும் மற்றொரு கும்பலுக்கும் இடையேஇருந்த முன்விரோதம் காரணமாக கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஜெகதீசன் தாக்கப்பட்டுபலத்த காயங்களுடன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) ஜெகதீசனின் எதிர்கும்பல் கூலிப்படையினருடன், பயங்கர ஆயுதங்களைஎடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் புகுந்தது.

அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நர்சுகள் மற்றும் தொழிலாளர்களை அடித்து விரட்டிவிட்டு, படுக்கையில்இருந்த ஜெகதீசனை சராமாரியாகத் தாக்கிக் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டது.

இதையடுத்து தாக்கப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரிஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்துத் தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+