சாட்சியிடம் ரூ.50 லட்சம் பேரம் பேசிய சரவணபவன் ராஜகோபால்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜீவஜோதி விவகாரம் தொடர்பான சாட்சிகளைக் கலைக்க ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால், ரூ.50லட்சம் வரை பேரம் பேசியதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் முத்துக்கருப்பன் கூறியதாவது:

ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலைச் சம்பவம் தொடர்பான சாட்சிகளைக் கலைக்க அப்பு என்பவரிடம்ரூ.50 லட்சம் வரை ராஜகோபால் பேரம் பேசியுள்ளார். இந்த நிலையில் அப்புவை போலீஸார் கைது செய்துவிட்டதால் பேரம் பாதியில் நின்று விட்டது.

கைது செய்யப்பட்ட அப்பு, முன்பு ஒருமுறை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் எர்ணாவூர் நாராயணன்என்பவரைக் கொலை செய்ய முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டவர். அந்த வழக்கின் கீழ் தற்போது அப்புகைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையின்போது இந்த 50 லட்ச ரூபாய் பேர விவகாரம்தெரிய வந்துள்ளது.

சாந்தகுமாரைக் கொன்ற டேனியல் மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் சாந்தகுமார் அணிந்திருந்தஷூக்களை வேறு இடத்தில் வீசியிருந்தனர். அவர்கள் அடையாளம் காட்டிய அந்த இடத்திலிருந்து ஷூக்களும்மீட்கப்பட்டுள்ளன.

சாந்தகுமார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கிண்டி உதவி போலீஸ் கமிஷனர் ராமச்சந்திரன்தலைமையிலான போலீஸ் குழு வியாழக்கிழமை கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்புகிறது.

டிராவல் ஏஜென்சி குறித்து விசாரணை:

டேனியல் நடத்தி வரும் டிராவல்ஸ் ஏஜென்சி குறித்து தற்போது விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. தனதுதேவைகளுக்கு இங்கிருந்துதான் வாகனங்களை எடுத்துக் கொள்வது ராஜகோபாலின் வழக்கமாம்.

சாந்தகுமாரையும் கூட இந்த டிராவல் ஏஜென்சிக்குச் சொந்தமான டாடா சுமோ காரில்தான் கடத்திச் சென்றுள்ளனர்.

2-வது மனைவி தலைமறைவு:

ராஜகோபாலின் 2-வது மனைவி கிருத்திகா தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள். அதேபோல, கிருத்திகாவின் முன்னால் கணவர் எங்கே என்பது குறித்தும் தேடி வருகிறோம்.அவரிடம் விசாரணை நடத்தினால் ராஜகோபால் குறித்த பல தகவல்கள் கிடைக்கலாம் என்பதால் வழக்கிற்குசம்பந்தம் இல்லாவிட்டாலும் கூட அவரையும் தேடி வருகிறோம் என்றார் அவர்.

இதற்கிடையே, ஜாமீன் கோரி ராஜகோபால் தாக்கல் செய்த மனு சென்னை நாலாவது செஷன்ஸ் கோர்ட்டில்வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால் ராஜகோபால் போலீஸ் காவலில் இருப்பதால் வழக்குவிசாரணையை வருகிற 13ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி அசோக் குமார் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+