ஆஸ்திரேலியாவில் விமானப் பயிற்சி பெற்றவன்
சிட்னி:
மும்பையில் பிடிபட்ட அல்-கொய்தா தீவிரவாதி தங்கள் நாட்டில் போயிங் விமானம் ஓட்ட பயிற்சி பெற்றதாகஆஸ்திரேலியா கூறியுள்ளது.
இதனை ஆஸ்திரேலிய அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். அந்த தீவிரவாதி ஆஸ்திரேலியாவில் 1997 மற்றும்1998ம் ஆண்டு வரை அங்கு விமானப்பயிற்சி மேற்கொண்டதாகவும் அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைப்பற்றி அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் கூறுகையில்,
இந்திய அதிகாரிகள் அந்த தீவிரவாதிக்கும் பின் லேடனுக்கும் உள்ள தொடர்பை விசாரித்து வருகிறார்கள். இந்தியஅதிகாரிகள் அந்த தீவிரவாதியை கைது செய்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் எங்கள் நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் பின்லேடனுக்கும் அவனுக்கும் தொடர்பு இருப்பதை உறுதிசெய்துள்ளனர். அவன் ஆஸ்திரலிய குடிமகன் அல்ல, 1998ல் விமானப்பயிற்சியை முடித்துக் கொண்டு அவன்அந்த ஆண்டே ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறிவிட்டான் என்றார்.












Click it and Unblock the Notifications