மாவட்ட தலைநகரங்களில் அமைச்சர்கள்: பந்தை முறியடிக்க தீவிரம்
சென்னை:
எதிர்க்கட்சிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தும் பந்தை முறியடிக்க, தமிழகத்தில் உள்ள மாவட்டதலைநகரங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் இன்று பந்த் நடத்துகிறது. இந்த பந்தைமுறியடிக்க தமிழக அரசும், அதிமுக கட்சியும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
முதற்கட்ட நடவடிக்கையாக, உயர்த்தப்பட்ட கட்டணங்களையும் விலைவாசிகளையும் சிறிது குறைத்துப் பார்த்ததுதமிழக அரசு. ஆனாலும் எதிர்க் கட்சிகள் அதைக் கண்டு ஒதுங்கிவிடவில்லை. கட்டாயம் பந்த் நடந்தே தீரும் என்றுஅறிவித்து விட்டன.
இந்த பந்த் வெற்றி பெற்றால் மக்களின் அதிருப்தி வெளிப்படையாகத் தெரிந்துவிடும் என்பதாலும், இந்த பந்த்தைஎப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.
அரசு சார்பிலும் அதிமுக சார்பிலும் இதற்காக தனித்தனியே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பஸ்களை பாதுகாப்பாக இயக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்கவும், அரசுஅலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களுக்கும் கூடுதல் பாதுகாப்புகொடுத்து அவற்றை இயங்கச் செய்யவும் அரசு சார்பில் முழு முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது.
மறு பக்கத்தில், தமிழக அமைச்சர்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.நேற்று இரவே அங்கங்கு போய்ச் சேர்ந்துள்ள அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் சேர்ந்துகொண்டு பந்த்தை முறியடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதற்கிடையே அதிமுக மாவட்டச் செயலாளர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். கடைகளை, அலுவலகங்களையாரேனும் மூடுமாறு சொல்லி வற்புறுத்தினால், நாங்கள் "கவனித்துக்" கொள்கிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications