தூக்கி வீசப்பட்ட மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு
சென்னை:
பெரும் அதிகாரத்துடன் செயல்பட்டு வந்த சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு திடீரென சாதாரணபதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதே போல முதல்வரின் முதன்மைச் செயலாளர் சி.கே.கயாலியும் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின் சென்னை மாநகராட்சி கமிஷ்னராக இருந்த ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு சண்முகராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டார். அவரும் சில நாட்களிலேயே மாற்றப்பட்டு ஆச்சார்யலு அந்தப் பதவிக்குவந்தார்.
மிக பயங்கர அதிகாரத்துடன் செயல்பட்டு வந்தார். மேயர் ஸ்டாலினை ஓரம்கட்டுவதற்காக ஆச்சார்யலுவுக்கு முழுஅதிகாரம் தரப்பட்டிருந்தது. அவரும் ஆட்டமாய் ஆடி அதிமுக தலைமையை குஷிப்படுத்தி வந்தார்.
கருணாநிதி கைதுக்கு காரணமாய் இருந்தவர்:
பதவிக்கு வந்த தினம் முதல் மேயர் ஸ்டாலினுக்கு எதிராகவே ஆச்சார்யலு செயல்பட்டு வந்தார். மேம்பால ஊழல்தொடர்பாக கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீஸில் இவர் கொடுத்த புகாரின்பேரில் தான்அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியை ஏன் கலைக்கக் கூடாது என்று கேட்டு ஸ்டாலினுக்கு நோட்டீஸ்அனுப்பினார். தொடர்ந்து ஸ்டாலினுக்குத் தலைவலி கொடுத்து வந்தார்.
இதை ஸ்டாலினே பலமுறை வெறுத்துப்போய் வெளியில் பகிரங்கமாக கூறியுள்ளார்.
டப்பா பதவி:
இந் நிலையில் ஆச்சார்யலு திடீரென மாற்றப்பட்டுள்ளார். ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வுக் கழககமிஷனர் என்ற டப்பா பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகவுன்சிலர்களையும் மிகக் கேவலமாக நடத்தி வருவதாக போயஸ் கார்டனுக்கு புகார் போய் இருந்தது. தாங்கள்கொடுத்த அதிகாரத்தை தங்களிடமே காட்டுவதாக அதிமுக தரப்பில் அதிருப்தி இருந்து வந்தது. இதன்விளைவாகத் தான் ஆச்சார்யலு தூக்கி வீசப்பட்டுள்ளார்.
புதிய கமிஷ்னர்:
சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனராக இருந்த பி.ஆர்.சம்பத், புதிய கமிஷனராக பதவி உயர்வுபெற்றுள்ளார்.
இதேபோல, முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த சி.கே.கரியாலி, சமூக நலத்துறை மற்றும் மதிய உணவுத்திட்டத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். கரியாலியின் இடத்திற்கு யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் வரை இந்தப் பதவி நிரப்பப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது.
இதுதவிர மேலும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பதவிகளும் மாற்றப்பட்டுள்ளன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications