இலங்கையில் சந்திரிகா-ரணில் மோதல் தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்பதற்கு முன்பே அவருடன் மோதலைத்தொடங்கிவிட்டார் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா.

கடந்த 5ம் தேதி நடந்த தேர்தலில் அருதிப் பெரும்பான்மை பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்கேயை ஆட்சி அமைக்க சந்திரிகா குமாரதுங்கா அழைப்பு விடுத்துள்ளார்.

இதையடுத்து தனது ஆதரவு எம்.பிக்களின் பட்டியலுடன் இன்று சந்திரிகாவை ரணில் விக்ரமசிங்கே சந்திக்கிறார்.அமைச்சர்கள் பட்டியல், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் தொடர்பாகவும் அவர் பேச்சு நடத்துவார்.

இதற்கிடையே தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து சந்திரிகா குமாரதுங்காவின் கட்சியைச் சேர்ந்த பிரதமர் தனதுபதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இலங்கையின் வரலாற்றிலேயே முதன்முறையாக அதிபர் ஒரு கட்சியும், பிரதமர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும்இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 2005ம் ஆண்டு இறுதி வரை சந்திரிகா அதிபர் பதவியில் இருப்பார்.

இதனால் இருவருக்கும் இடையே கடும் மோதல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோதலை சந்திரிகாஏற்கனவே தொடங்கிவிட்டார்.

நேற்று ராணுவத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய ரணில் விக்கிரமசிங்கே, நாட்டில் அமைதியை நிலை நாட்டபாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். எநத்க் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தவறுசெய்பவர்களை தண்டிக்க உத்தரவிட்டார்.

இந் நிலையில் இதற்கு எதிராக சந்திரிகா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அதிபர், ராணுவஅமைச்சர், முப்படைகளின் தலைவர் என்ற முறையில் நான் தான் ராணுவத்துக்கு உத்தரவிட முடியும்.பிரதமரை விடஅதிகாரம் அதிகம். எனது உத்தரவை மீறும் ராணுவ, போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேயின் கட்சிக்கு 109 இடங்களும், சந்திரிகா கட்சிக்கு 77இடங்களும் கிடைத்துள்ளன.

அதிபர் என்ற முறையில் சந்திரிகாவின் தலைமையில் தான் அமைச்சவை இயங்க முடியும். ஆனால், அமைச்சர்கள்அனைவரும் ரணிலின் ஆட்களாக இருப்பார்கள். இதனால், பிரச்சனைகள் தொடரும் எனத் தெரிகிறது.

தேர்தலையொட்டி நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை தளர்த்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+