ஊமை மாணவியை கற்பழித்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல்
சென்னை:
ஊமை மாணவியை கற்பழித்த நபருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் பிறவி ஊமை, காதும் கேட்காது. மதுரையில் உள்ள வாய் பேச முடியாதோர், காது கேளாதோர் பள்ளியில் ராஜேஸ்வரி படித்து வந்தார்.
இந்த நிலையில் பூவந்தியைச் சேர்ந்த குமார் என்ற வாலிபர் கடந்த 1995ம் ஆண்டு ராஜேஸ்வரி தனியாக இருந்தபோது அவரை தனியிடத்திற்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக கற்பழித்தார்.
அப்போது அந்த வழியாக சிலர் வந்ததைப் பார்த்ததும் ராஜேஸ்வரியை விட்டு விட்டு தப்பினார். ராஜேஸ்வரியை மீட்ட கிராமத்தினர் அவரை பத்திரமாக வீட்டில் சேர்த்தனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற ராஜேஸ்வரி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தார்.
ராஜேஸ்வரியை மிருகத்தனமாக கற்பழித்த குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சிவகங்கை உதவி செஷன்ஸ் நீதிமன்றத்தில் குமாருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் இதை உறுதி செய்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் குமார் அப்பீல் செய்தார்.
இந்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி பாக்கியராஜ், மனைவியாக இல்லாத ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வது கற்பழிப்புக்குச் சமம். ஆனால் ராஜேஸ்வரியோ வாய் பேச முடியாத, காது கேட்காத பெண் என்று தெரிந்திருந்தும் இரக்கமேயில்லாமல் குமார் அவரைக் கற்பழித்துள்ளார்.
எனவே இது மன்னிக்க முடியாத குற்றமாகும். அவருக்கு கீழ்க் கோர்ட்டில் விதிக்கப்பட்ட 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை சரியானதே என்று கூறி தீர்ப்பை உறுதி செய்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications