தமிழகத்தில் மாணவர் போராட்டம் வெடிக்கிறது: சாலைமறியல்கள்... வகுப்புகள் புறக்கணிப்பு
சென்னை:
சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு கல்லூரி மாணவர்களும்போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் இது மாணவர் போராட்டமாக வெடித்துள்ளது.
சென்னை, கோவையில் கல்லூரி மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல கல்லூரி மாணவர்கள்வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெள்ளிக்கிழமை இரவு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே ஹோட்டலில் தகராறுஏற்பட்டது. இந்த மோதலைத் தடுக்க வந்த போலீசார் திடீரென மாணவர்களைப் போட்டு அடிக்க ஆரம்பித்தனர்.இதனால் மாணவர்-போலீசார் மோதலாக மாறியது.
இதைத் தொடர்ந்து அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் நுழைந்த போலீசார் அங்கு இருந்தமாணவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினர். சீருடை அணியாமல் மப்டியில் வந்த அந்த போலீசார் துணைக்குரெளடிகளையும் அழைத்துக் கொண்டு வந்து கண்மூடித்தமாகத் தாக்கினர்.
இதில் 40க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. பலருக்கு மண்டை உடைந்தது. கை-கால்களும்முறிந்தன. இவர்கள் அனைவரும் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மருத்துவனையில் இருந்த 35 மாணவர்களை போலீசார் கைது செய்து கட்டுக்களுடன் வேலூர் சிறைக்குக் கொண்டுசென்றனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும் போலீசாரின் அராஜகத்தையும் கடித்து பல கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில்இறங்கியுள்ளனர்.
லயோலா, பச்சையப்பன், நந்தனம்....
இன்று சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் தேர்வுகளைப் புறக்கணித்தனர். சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக லயோலா கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி, பச்சையப்பன்கல்லூரி, தாம்பரம் கிருஸ்துவக் கல்லூரி, திருவள்ளூர் பொன்னேரி கலைக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப்புறக்கணித்துவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பூந்தமல்லிநெடுஞ்சாலையிலும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் கடற்கரை சாலையிலும் போராட்டம் நடத்தினர். இதனால்,இந்தச் சாலைகளில் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இவர்கள் தவிர பல்வேறு கல்லூரி மாணவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர்.
கோவையில்...
கோயம்புத்தூரில் சட்டக் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து பிற கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப்புறக்கணித்தனர்.
போலீஸ் அராஜகத்தை எதிர்த்து கண்டன ஊர்வலம் நடத்திய ஆயிரக்கணக்கான மாணவர்கள் சாலை மறியலிலும்ஈடுபட்டனர். அவர்களைக் கலைக்கச் சென்ற போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது.
இதையடுத்து 140 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் அப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரியுள்ளன.
பிற நகர்களில்...
அதே போல மதுரை, சிதம்ரம், வேலூர் ஆகிய நகர்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications