இன்னொரு ஆப்கன் அமைச்சரும் இந்தியா வருகிறார்
டெல்லி:
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள டாக்டர் அப்துல்லா அப்துல்லா இந்தியத்தலைவர்களுடன் பேச்சு நடத்த டெல்லி வருகிறார்.
இந்தியாவுடன் மிகுந்த நட்புறவைக் கொண்டவர் அப்துல்லா. இவர்களின் படைக்கு இந்தியா நேரடியாகவும்மறைமுகமாகவும் ஆயுதங்களையும், பண உதவிகளையும் செய்துள்ளது. தலிபான்களை எதிர்த்துப் போரிடரஷ்யாவுடன் சேர்ந்து இந்தியாவும் இவர்களுக்கு உதவியது.
காஷ்மீரில் தொல்லை தந்து வரும் தலிபான், பாகிஸ்தான், அல-கொய்தா தீவிரவாதிகளை ஒடுக்க இவர்களின்உதவியை இந்தியா கோரியுள்ளது.
தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் இந்திய எதிர்ப்புத் தீவிரவாதிகளை பாகிஸ்தானும் பின்லேடனும்முகாம்கள் அமைத்து உருவாக்கி வந்தனர். இப்போது இந்தத் தீவிரவாதிகளை நார்த்தர்ன் அலையன்ஸ் படைஒழித்துக் கட்டும். இந்தியாவுக்கு எதிரான எந்த செயல்களும் ஆப்கானிஸ்தானில் நடக்காமல் இந்தப் படை பார்த்துக்கொள்ளும்.
அதேபோல, அங்கு புதிய அரசு பொறுப்பேற்க உள்ள நிலையில் இந்தியா தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் எனநார்த்தர்ன் அலையன்ஸ் விரும்புகிறது. இதற்காகத் தான் அந் நாட்டின் உள்துறை அமைச்சராகவுள்ள யூனுஸ்கானூனி கடந்த வாரம் இந்தியா வந்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், உள்துறை அமைச்சர்அத்வானியுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க மேலும் 2 நாட்கள் அவர் டெல்லியில் தங்கியுள்ளார். ஜப்பான் சென்றுள்ளவாஜ்பாய் திரும்பி வந்தவுடன் அவரை கானூனி சந்திப்பார்.
இந் நிலையில் டாக்டர் அப்துல்லா அப்துல்லாவும் புதன்கிழமை இந்தியா வருகிறார். இரண்டு நாட்கள் டெல்லியில்இருக்கப்போகும் இவர் பிரதமர் வாஜ்பாய், ஜஸ்வந்த்சிங், அதிவானி ஆகியோரை சந்தித்துப் பேசுவார்.
இதற்கிடையே அமைச்சர் கானூனியை இந்திய விமானப் படையின் சிறப்பு விமானத்தில் ஆப்கானுக்கு அனுப்பிவைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த விமானத்தில் ஆப்கன் மக்களுக்கு உணவையும், மருந்துகளையும்எடுத்துச் செல்லப்படும்.
ஆப்கானிஸ்தானை மீண்டும் சீரமைக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
காபூலில் தலிபான்களால் சேதப்படுத்தப்பட்ட இந்தியத் தூதரகத்தை திருப்பிக் கட்டும் பணியையும் மத்திய அரசுதொடங்கியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications