புதிய கமிஷனரானார் விஜயகுமார்
சென்னை:
சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கே. விஜயகுமார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நியமிக்கப்பட்டார்.
சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த முத்துக்கருப்பன் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவருக்குப்பதிலாக, தற்போது சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படை ஐ.ஜியானவிஜயகுமார் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு சுமார் 07.30 மணியளவில் புதிய சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக விஜயகுமார்பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தார் முத்துக்கருப்பன்.
புதிய கமிஷனர் விஜயகுமார், கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பளித்த கறுப்புப்பூனைப் படைக்குத் தலைமை வகித்தார். பின்னர் திமுக ஆட்சியின்போது மத்தியப் பணிக்கு மாற்றப்பட்டு, எல்லைப்பாதுகாப்புப் படையில் பணியாற்றினார்.
பின்னர் கடந்த மே மாதம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் அதிரடிப்படை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார்.இதனால் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் மட்டுமின்றி, முன்னாள் டிஜிபி தேவாரத்தின்அன்புக்குரிய சிஷ்யர்தான் விஜயகுமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை நகரில் ரவுடிகளை ஒழிப்பதே தனது முதல் வேலை என்று கூறியுள்ளார் விஜயகுமார். மேலும்,பத்திரிக்கையாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நல்லுறவு நீடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்அவர் கூறியுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications