போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் 4000 பேர்: "திடுக்" தகவல்
சேலம்:
தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 4000 பேர் போலி சாதி சான்றிழ் கொடுத்து மத்திய, மாநிலஅரசு பதவி வகிக்கின்றனர் என்று தேசிய எஸ்.சி., எஸ்.டி. நலத்துறை ஆணைய இயக்குனர் கண்ணகி பாக்யநாதன்தெரிவித்தார்.
இது குறித்து சேலத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகள், பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள்போன்றவை ஆய்வு செய்யப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் மட்டும் 368 பேர் எஸ்.சி., எஸ்.டி., போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில்சேர்ந்துள்ளனர். தமிழகம் முழுவதும் நாலாயிரம் பேர் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து மாநில மற்றும் மத்தியஅரசு பணியில் சேர்ந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் போலி சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது வரை ஏழு பேர்பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 26 பேர் மீது விசாரணை நடந்து வருகிறது. நீதிமன்றத்தில் 93 வழக்குகள்உள்ளன. 235 பேரிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை நடந்து வருகிறது.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள், அப்பீல் செய்துவிட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களின்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் வகிக்கும் பதவியோடு அனைத்து தகுதிகளையும் இழப்பார்கள்.
இந்த கொடுமைகளை கண்டறியவும், நிகழாமல் தடுக்கவும் தனி நீதிபதி தலைமையில் கமிஷன அமைக்கபரிந்துரைக்கப் பட்டுள்ளது.
இது போல போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து பலர் அரசு வேலை வாய்ப்பை பெறுவதால், உண்மையானஆதிதிராவிட பழங்குடியினத்தவர்க்கு அரசு சலுகைகள் பறிக்கப்பட்டு வருகிறது. பழங்குடியினருக்கான அரசுசலுகைகள் அனைத்தும், அதே சமுதாயத்தை சேர்ந்த புரோக்கர்களால் சூறையாடப்படுகிறது.
இந்த நிலை தவிர்க்கப்படவும், அது போன்ற நபர்களை கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுஎன்றும் அவர் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications