அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர் கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களிடமிருந்து நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நிதி நெருக்கடியைச் சமாளிக்க கடந்த மாத இறுதியில் தமிழக அரசு பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டது.பஸ், மின்சாரக் கட்டணங்களை உயர்த்தியதோடு நில்லாமல், பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும்தமிழக அரசு கடுமையாக உயர்த்தியது.

அப்போது, அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்க்க வரும் பார்வையாளர்களிடம் ரூ.5 கட்டணமாகவசூலிக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. கடந்த 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்தது.

இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கில் பணம் வசூலாகியது. இது மட்டுமில்லாமல்,பார்வையாளர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததால் அரசு மருத்துவமனைகள் படு சுத்தமாகக்காட்சியளித்தன.

இந்நிலையில் பார்வையாளர் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றுசூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசுமருத்துவமனைகளில் பார்வையாளர் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதற்குத் தடை விதிக்கப்படுவதாகக் கூறிதீர்ப்பளித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+