கொடைக்கானலில் கடும் குளிர் - வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு
கொடைக்கானல்:
கொடைக்கானலில் குளிர் கால சீசன் தொடங்கியதை அடுத்து, இந்த சீசனை அனுபவிக்க வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் கொடைக்கானலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
மலை வாசஸ்தலமான கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்கள் சீசன் காலங்களாகும். செப்டம்பர், அக்டோபர்மழைக்காலங்களாகும். டிசம்பர், ஜனவரி மாதங்கள் குளிர் காலங்களாகும்.
இந்த மாதம் தொடங்கிய குளிர் காலத்தில் தற்போது குறைந்த பட்ச வெப்பநிலை 4 டிகிரியாக உள்ளது. இதனால்மாலையிலேயே குளிர் தொடங்கி விடுவதால், மக்கள் கூட்டம் அப்போது குறையத் தொடங்குகிறது. இரவுநேரத்திலோ கடுமையான குளிர் காற்று வீசுகிறது.
குளிர்காலம் தொடங்கிய டிசம்பர் முதல் வாரத்திலேயே பனி அதிகமாக இருப்பதால், இம்மாத இறுதியில்குறைந்தபட்ச வெப்பநிலை 0 டிகிரியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தக் குளிர் நம்மூர் மக்களுக்குக் கொஞ்சம் திண்டாட்டமாக இருந்தாலும், வெளிநாட்டு மக்களுக்கு பெரும்கொண்டாட்டம்தான்.
இதையடுத்து, கொடைக்கானலின் குளிர்கால் சீசனை அனுபவிக்க வெளிநாட்டு பயணிகள் கொடைக்கானலுக்குவந்தவண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications