மலேசியா: ஆணுறைக்கு கட்டுப்பாடு - மக்கள் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்:
மலேசியாவில் ஆணுறை விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர்.
எய்ட்ஸ் நோய்க்கிருமி தாக்கியவர்களுக்கு மட்டும் ஆணுறை விற்கப்பட வேண்டும். திருமணமான தம்பதிகள்டாக்டர் கடிதத்தை காட்டினால் மட்டுமே அவர்களுக்கு ஆணுறைகளை விற்க வேண்டும் என்று அரசாங்கம்கட்டுப்பாடு விதித்திருந்தது.
இதற்கு மலேசிய பெண்கள் விவகாரத்துறை மந்திரியும் சமூக சேவை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மலேசிய அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலீலும் இதற்குக் கடும எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்தக்கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் அவர் அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications