பொடோ சட்ட மசோதாவை கிழித்து எறிந்த எதிர்க் கட்சியினர்
டெல்லி:
சவப் பெட்டி ஊழல் தொடர்பாக விவாதம் நடத்தாமல் பொடோ சட்டம் குறித்த மசோதாவை உள்துறை அமைச்சர்அத்வானி லோக்சபாவில் தாக்கல் செய்ததையடுத்து அந்த சட்ட மசோதாவின் நகலை எம்.பிக்கள் கிழித்துஎறிந்தனர்.
பொடோ சட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இந் நிலையில் இன்று கார்கில் சவப்பெட்டி ஊழல் அம்பலமானது. இது குறித்து எதிர்க் கட்சிகளுக்கும் பா.ஜ.க. எம்.பிக்களுக்கும் மோதல்ஏற்பட்டதையடுத்து லோக்சபா பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இதன் பின்னர் 12 மணிக்கு அவை கூடியதும் மீண்டும் சவப் பெட்டி ஊழல் பிரச்சனை வெடித்தது. ஆனால், அதைக்கண்டுகொள்ளாமல் பொடோ சட்ட மசோதாவை அத்வானி தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவின் நகல்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டன.
இதையடுத்து சமாஜ்வாடிக் கட்சியின் எம்.பி. எழுந்து பாதுகாப்புத்துறையில் ஊழல் செய்யும் இந்த அரசு இப்போதுமக்கள் விரோத சட்டத்தை வேறு கொண்டு வருகிறதா என்று கூறியவண்ணம் அந்த சட்ட மசோதாவின் நகல்களைகிழித்து எறிந்தார்.
இதற்கு பா.ஜ.கவினர் எதிர்ப்புத் தெரிவிக்க, இரு தரப்பினரும் கூச்சலிட்டனர். எதிர்க் கட்சியினர் அவையின்மையத்தின் கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சபையை மீண்டும் நாள் முழுவதும் ஒத்தி வைக்க வேண்டிய நிலைக்கு சபாநாயகர் பாலயோகிதள்ளப்பட்டார். இதே நிலை தான் ராஜ்யசபாவிலும் ஏற்பட்டது. இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இதையடுத்து அவையை மீண்டும் அமைதியாக நடத்தவும், அவையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள சிலர் வரம்பு மீறிநடந்து கொண்டது குறித்து விவாதிக்கவும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை பாலயோகி கூட்டினார்.அந்தக் கூட்டம் மாலை வரை நீடித்தது.
அவை ஒத்தி வைக்கப்பட்ட பின் வெளியே வந்த முலாயம் சிங், இந்தப் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்றுஅறிவித்தார்.
நாளை மீண்டும் பொடோ சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications