உண்ணாவிரதப் போராட்டம நடத்திய 33 சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது
சென்னை:
கல்லூரி வாசலின் முன் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய 33 சென்னை சட்டக் கல்லூரிமாணவர்களை இன்று (புதன்கிழமை) காலை போலீசார் கைது செய்தனர்.
சட்டக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் புகுந்து போலீசார் தாக்கியதைக் கண்டித்து, கடந்த ஐந்து நாட்களாக டாக்டர்அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிலிருந்து சட்டக் கல்லூரி வாசலில் அமர்ந்து மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
வாசலில் அமர்ந்து போராடக் கூடாது என்று கல்லூரி முதல்வர் கூறிய பிறகும் மாணவர்கள் அங்கிருந்து கலைந்துபோகாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, போலீசாரை அழைத்த கல்லூரி முதல்வர் கல்லூரி வாசலிலிருந்து மாணவர்களைஅப்புறப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
விரைந்து வந்த போலீசார், கல்லூரி வாசலின் முன் அமர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்களைஅப்புறப்படுத்த முயற்சித்தனர்.
ஆனால் மாணவர்கள் எழுந்து செல்ல மாட்டோம் என்று கூறி கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து, 33மாணவர்களைப் போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் கல்லூரி வாசலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஒரு மண்டபத்தில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கைதைக்கண்டித்து கைதான மாணவர்கள் அங்கேயும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.
"எங்களைக் கைது செய்தாலும் நாங்கள் போராட்டத்தைத் தொடருவோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை நாங்கள் எதுவும் சாப்பிடப் போவதில்லை" என்று அம்மாணவர்கள் கூறினர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications