தமிழகம் முழுவதும் அரசு, சட்டக் கல்லூரிகளை மூட அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளை மூட வேண்டும் என்று நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை சட்டக் கல்லூரி விடுதி மாணவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதையடுத்து, அக்கல்லூரி மாணவர்கள்பெரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மீது தொடரப்பட்டவழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இவர்களுடைய போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள மற்ற கல்லூரி மாணவர்களும் ஆதரவு தெரிவித்துபோராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கல்லூரிகளில் கடந்த இரண்டு நாட்களாக வகுப்புகளேநடக்கவில்லை.

மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலைக் கல்லூரிகள்மற்றும் சட்டக் கல்லூரிகளை மூடுவதற்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் இந்தப் போராட்டம் காரணமாக வன்முறை வெடித்து, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படும்என்று கருதிய தமிழக அரசு, அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளையும், மாணவர் விடுதிகளையும் மூடஉத்தரவிட்டுள்ளது.

மேலும், தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும் தமிழக அரசுதெரிவித்துள்ளது.

நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+