திண்டுக்கல் அரசு டாக்டர்களிடம் லஞ்சம் கேட்ட அதிகாரி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

சுகாதாரத்துறை இணை இயக்குனர் லஞ்சம் கேட்டதால், திண்டுக்கல் மருத்துவமனையில் உள்ள அரசு டாக்டர்கள்இன்று (புதன்கிழமை) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனையை பார்வையிடுவதற்காக ஒவ்வொரு மாதமும் சுகாதாரத்துறைஇணை இயக்குநரான டாக்டர் புவனேந்திரன் வருவது வழக்கம். அப்படி ஒவ்வொரு முறை அவர் வரும்போதும்,பணியிலிருக்கும் டாக்டர்களிடம் லஞ்சம் கேட்பதும் அவருடைய வழக்கமாம்.

அவர் கேட்கும் லஞ்சத்தைக் கொடுக்காத டாக்டர்களை டிரான்ஸ்பர் செய்யப் போவதாகவும், சஸ்பெண்ட் செய்யப்போவதாகவும் புவனேந்திரன் மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற அரசு டாக்டர்கள் அந்த அதிகாரியை கண்டித்து, திண்டுக்கல் மற்றும் பழனியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அரசு டாக்டர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, அங்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பெரிதும்அவதிப்பட்டனர்.

இதையடுத்து வேலை நிறுத்தத்தைக் கைவிட்ட டாக்டர்கள், புவனேந்திரன் மீது தமிழக அரசு உடனடியாகநடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் வேலை நிறுத்தம் செய்வோம் என்று கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+