அமெரிக்க நிறுவனம் ரூ.1 கோடி திருப்பித் தரும்: பெர்னாண்டஸ்
டெல்லி:
அலுமினிய சவப்பெட்டி சப்ளை செய்த அமெரிக்க நிறுவனத்திடம் ரூ.1 கோடி திருப்பி கேட்டுள்ளோம் என்றுராணுவ மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை வைப்பதற்கு அலுமினிய சவப்பெட்டிகள் வாங்கியதில் ரூ.1கோடி ஊழல் நடந்துள்ளதாக நேற்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் புகார் எழுப்பின.
இது தொடர்பாக மத்திய ராணுவ மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் நிருபர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர்நிருபர்களிடம் கூறியதாவது,
கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களின் உடல்களை எடுத்து செல்வதற்காக அமெரிக்காவில் உள்ள பிட்ரன்அண்டு பைஸ் நிறுவனத்திடம் இருந்து சவப்பெட்டிகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஒரு சவப்பெட்டிக்கு 2,665 டாலர் கேட்டதற்கு, 2,500 டாலர் என்று அதன் விலையை அதற்கான குழு நியமித்து,ஒப்பந்தம் போடப்பட்டது. 18 கிலோ எடை கொண்ட 150 அலுமினிய சவப்பெட்டிகளுக்கு ரூ.1 கோடியே 80லட்சம் என்ற விலையில் ஆர்டர் கொடுத்து இருந்தோம்.
ஆனால் அந்த நிறுவனமோ ஒவ்வொன்றும் 54 கிலோ எடையுள்ள எடையுள்ள பெட்டிகளாக அனுப்பி வைத்துவிட்டது. 6 கோடி ரூபாய்க்கு 150 பெட்டிகள் வந்து இருந்தன. அந்த பெட்டிகள் வந்த பிறகே அவை 54 கிலோஎடையுள்ள பெட்டிகள் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
எனவே அந்த காண்டிராக்டை ரத்து செய்து பணத்தை திருப்பி கேட்டோம். ரூ.78 லட்சம் ஏற்கனவே திரும்பப்பெறப்பட்டது. மீதியுள்ள 1 கோடியே 2 லட்சத்தை கேட்டு கடிதம் எழுதி இருக்கிறோம். தராவிட்டால் கோர்ட்டில்வழக்கு தொடர்வோம்.
மத்திய கணக்கு தணிக்கை அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டபோது நான் மந்திரி பதவியில் இல்லை. மத்தியகணக்கு தணிக்கை அதிகாரி கொடுத்துள்ள தகவல் பற்றி பொதுக்கணக்கு குழு முடிவு செய்து அறிவிக்கும் என்றுஅவர் கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications