சென்னையில் மாயமான 9 மாணவிகள் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் காணாமல் போன 9 பள்ளி மாணவிகள் ஊட்டி மற்றும் கன்னியாகுமரியில் இருப்பதாகப் போலீசார்கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை ராயபுரத்தில் உள்ள புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த ஷாலினி,தீபா, கோமளாராணி, பூர்ணிமா, அந்தோணி மேரி, ஷிபா பிரியதர்ஷிணி ஆகிய ஆறு மாணவிகளும் கடந்ததிங்கள்கிழமை இரவு காணாமால் போய்விட்டனர்.

இந்த ஆறு மாணவிகளுக்கும் 17 வயதுதான் ஆகிறது. திங்கள்கிழமை மாலை பள்ளியில் நடக்கும் கிறிஸ்துமஸ்விழாவுக்குச் சென்ற மாணவிகள், விழா முடிந்து வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடிய பிறகும் அவர்கள் கிடைக்காததால், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவர்களின்பெற்றோர்கள் ராயபுரம் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.

இதே போல் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பில் படித்துவந்த 14 வயது மாணவிகளான ரஞ்சனா, அர்ச்சனா மற்றும் கோமளவள்ளி ஆகியோரும் திங்கள்கிழமை காணாமல்போயினர்.

இதற்கிடையே காணாமல் போன ஆறு ராயபுரம் பள்ளி மாணவிகளும் ஊட்டியில் இருப்பதாகப் போலீசாருக்குத்தகவல் கிடைத்தது.

ஊட்டியைச் சுற்றிப் பார்க்க விரும்பிய அந்த ஆறு மாணவிகளும், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் பஸ் ஏறிக்கிளம்பிச் சென்றுள்ளனர்.

ஆனால் போலீஸ் விசாரணையின்போது, மகாபலிபுரத்தைச் சேர்ந்த ஒரு நபர்தான் அம்மாணவிகளுக்குத்தேவையான பொருட்களைக் கொடுத்து அவர்களை ஊட்டிக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிய வந்துள்ளது. அவர்தற்போது போலீசாரின் பிடியில் உள்ளார்.

அதேபோல் காணாமல் போன ராஜா அண்ணாமலைபுரம் பள்ளி மாணவிகள், கன்னியாகுமரி போலீசாரிடம்சிக்கியுள்ளனர். பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு அவர்கள் அங்கு சென்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, இந்த ஒன்பது மாணவிகளையும் மீட்டுக் கொண்டு வருவதற்காக ஊட்டிக்கும் கன்னியாகுமரிக்கும்தனித்தனி போலீஸ் படை விரைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+