திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் அரை நிர்வாணப் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று(புதன்கிழமை) அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினர்.

சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி விடுதி மாணவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில்போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். காயமடைந்த மாணவர்களில் 35 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர்ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய 33 சட்டக் கல்லூரி மாணவர்களையும் போலீசார் இன்றுகாலை கைது செய்தனர்.

இம்மாணவர்களுக்கு ஆதரவாக திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள்இன்று அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் பேண்ட் மட்டும் போட்டுக் கொண்டு, போலீசாருக்கு எதிராகக்கோஷங்களை எழுப்பினார்கள்.

நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினார்கள்.நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மதுரையில்...

இதற்கிடையே மதுரையில் உள்ள கல்லூரி மாணவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு முன் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரி மாணவர்கள் ஊர்வலமும்நடந்தது.

மேலும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.

இதேபோல் சேலம், நெல்லை, கோவை போன்ற நகரங்களிலும் இன்று மாணவர்கள் போராட்டம் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+